•  

உடற்பயிற்சி செய்தால் விந்தணு அதிகரிக்கும்!

விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையினரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்களின் சுரப்பு தூண்டப்படுவதோடு விந்தணு உற்பத்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.Men who exercise 'produce healthier semen'
 மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாறிவரும் உணவுப்பழக்கத்தினாலும் இன்றைய இளைஞர்களின் விந்தணு உற்பத்தி குறைந்து வருவதாக கொலரோடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த குறைபாட்டை நீக்குவதற்கு செக்ஸ் ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்து மீண்டும் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.உடல்ரீதியான செயல்பாடுகள் மூலம் இந்த ஹார்மோன்களை சீராக சுரக்கச் செய்யலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.எப்.எஸ்.எச் எனப்படும் (follicle-stimulating hormone) எல்.ஹெச்(luteinising hormone) டெஸ்ட்டோடிரோன், கார்டிசால் போன்ற ஹார்மோன்களை சரியாக சுரக்கச் செய்கிறது. இதன் மூலம் உடலில் விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறதாம்.31 ஆண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் சுரப்பதோடு எப்.எஸ்.எச், எல்.எச், டி ஹார்மோன் சரியான விகிதத்தில் சுரக்கிறது. இதன் காரணமாக விந்தணு உற்பத்தியும் அதிகரிக்கிறது.என்று ஆய்வாளர்கள் கூறினர். இந்த ஆய்வு முடிவு ஐரோப்பிய மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
English summary
In a new study, researchers have linked moderate physical activity in males with better hormone levels and sperm characteristics that favour reproduction as compared to sedentary men.
Story first published: Wednesday, November 7, 2012, 9:51 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more