•  

அதில் திருப்தியில்லையா? விரக்தி அதிகரிக்குமாம்!

Women
 
ஆர்வமும், ஆசையும் அதிகமாக இருந்தால்தான் துணையுடன் உற்சாகமாக உறவில் ஈடுபடமுடியும். ஆனால் செக்ஸ் குறித்த சிந்தனைகள் இல்லாமலோ, அது பற்றிய ஆசையோ குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்திதான் எஞ்சியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். சர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாலியல் நினைவுகளும், அது தொடர்பான எண்ணங்களும் நம்மை உயிர்போடு வைத்திருக்கும். அதேசமயம் பாலுணர்வு குறைவாக இருந்தாலோ, நாம்மால் துணையுடன் இயல்பாக உறவில் ஈடுபடமுடியவில்லை என்றாலோ ஒருவித குற்ற உணர்வு ஆட்கொள்ளும். இது தொடர்பாக செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த 5098 பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



இந்த பெண்களிடம் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.



அப்போது செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம். மேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.



ஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.



இயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.



English summary
Sexual appetite (libido) tends to wax and wane - there are periods in our lives when we have little desire for sex, and other periods when sex assumes an overriding importance. Most of the time we are somewhere in between. So losing interest in sex is probably a temporary phase, and not a disaster. In fact it is only a problem if it means there is an imbalance between our desires and those of our partner, if it makes our partner feel unloved and frustrated, or if we ourselves feel unhappy because of it.
 
Story first published: Monday, September 3, 2012, 15:18 [IST]

Get Notifications from Tamil Indiansutras