•  

செக்ஸ் வாழ்க்கையில ஈடுபட முடியலையே!

Erectile dysfunction in Diabetes
 
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலோனோர் தாம்பத்ய உறவில் சரியாக செயல்பட முடியாமல் சிக்கல்களை சந்திக்கின்றனர். 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் செக்ஸ் வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பாக கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கின்றது. பெரும்பாலோனோர் ஈ.டி. எனப்படும் எரெக்டைல் டிஸ்ஃபங்ஷன் (Ereticle disfunction) எனப்படும் எழுச்சியற்ற தன்மையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.



நீரிழிவு நோயானாது உலகை அச்சுறுத்தும் மிகப்பெரிய நோயாக திகழ்கின்றது. உலகம் முழுவதும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஆறு மடங்கு அதிகம் நோயாளிகள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களின் முக்கிய பிரச்சினை தாம்பத்ய உறவில் ஏற்படும் சிக்கல்தான் என்று மருத்துவர்கள் அறிவிக்கின்றனர். உலகெங்கும் கேட்கப்படும் மருத்துவம் தொடர்பான கேள்விகளில் டயாபடீஸ் நோயாளிகளின் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய கேள்வி முன்னணியில் நிற்கிறது.



டெரிக் சி. போலோன்ஸ்கி தனது 'Talking about sex' என்ற புத்தகத்தில் ஆண்கள் பெண்கள் இரு பாலாரிலும் 20 சதவிகிதம் பேர் செக்ஸ் உறவில் பிரச்சினை என்று தெரிவிப்பதாகக் கூறுகிறார். ஆனால் இது இப்போது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து விட்டதால் போலோன்ஸ்கி முதலில் உடல் வியாதி என்ற நிலையில் இது ஆரம்பித்து உணர்ச்சி பூர்வமான வியாதியாகிறது என்கிறார்.



நீரிழிவு நோயானது ஆண்களில் ஜனன உறுப்பின் விறைப்பு இன்மை விவாகரத்தில் கொண்டு போய் விடுகிறது. சென்னை யில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 40 வயதிற்கும் கீழே உள்ளோர் இந்த உறுப்பு விரைப்பு இன்மையினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.



பெண்களுக்கு நீரிழிவு பிரச்சினை ஏற்பட்டால் அதிகளவிலான பிரச்சினை தாக்குகிறது. பெண்களில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளை விட டைப் 2 நீரிழிவு நோயாளிகளே அதிகமாக செக்ஸ் குறைபாடு உள்ளவர்களாகத் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தாம்பத்ய உறவின் போது பிறப்புறுப்பில் வறட்சி என்ற பிரச்சினை ஏற்படுகிறது. டைப் 1 நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களை விட தங்களின் கவர்ச்சி குறைந்துவிட்டதோ என்ற கவலையும் இவர்களை ஆட்கொள்வதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலே தாம்பத்ய உறவில் சரிவர ஈடு கொடுக்க முடியாமல் போகிறது என்கின்றனர் நிபுணர்கள்.



நீரிழிவினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆர்காஸம் இன்மை, செக்ஸில் திருப்திக் குறைவு, செக்ஸ் உறவே வேண்டாம் என்று ஒதுங்கிப் போதல், கர்ப்பிணி என்றால் அதிக பயம் என்று பல்வேறு ரூபங்களில் டயாபடீஸ் கொடுமைப்படுத்துகிறது. இதனால் மனச்சோர்வு, கவலை முதலியவற்றால் எழும் வியாதிகள் தனி நபர் பிரச்சினையிலிருந்து குடும்ப பிரச்சினையாக மாறி விடுகிறது! பெண்களுக்கு ஜனன உறுப்பில் இன்பெக்ஷன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது.



வயதாக ஆக ஆக செக்ஸ் உணர்வுகள் இயல்பாகவே குறையும். மேலும் செக்ஸ் உணர்ச்சி உந்தி எழுந்து உடல் உறுப்பில் அதன் தாக்கம் தெரியவும் கூடுதல் நேரம் ஆகும். ஆகவே தம்பதிகள் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவதோடு தேவையென்றால் மருத்துவர் ஆலோசனையையும் நாட வேண்டும். ஒரு நல்ல நியூராலஜிஸ்டை அணுகலாம்.



டயாபடிக் நியூரோபதி என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் செக்ஸ் உறவுப் பிரச்சினை மிக மெதுவாக இருப்பதில் ஆரம்பித்து ஆண்மைக் குறைவு வரை அதிகரிக்கும். முன்பு போல உடனடி விறைப்பு இல்லையே என்ற ஏக்கம் எழலாம். ஆனால் இதற்கெல்லாம் இப்போது தகுந்த மருந்துகள் வந்து விட்டன என்பதால் கவலை வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள்.



ஆண்மைக் குறைவு என்று மனதிற்குள் புழுங்கி தவிப்பதை விட தனக்கு நீரிழிவு என்று அறிந்து கொண்டாலே பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதியை வியாதியைக் குணப்படுத்துவதன் மூலம் பூரண குணம் அடையலாம். எவ்வளவுக்கு எவ்வளவு சீக்கிரம் மருத்துவரை அணுகுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு விரைவாக வியாதி போய் நார்மல் நிலைக்குத் திரும்பலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் இந்த சிக்கல்களை நல்ல மருத்துவரினால் மட்டுமே தீர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.



ஆண்கள் ஜனன உறுப்பில் அதிக ரத்தம் பாய்வதற்கான வழிகளை நவீன மருத்துவம் கண்டுபிடித்து செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது. மிராகிள் க்யூர் என்று எதுவுமே டயாபடீஸில் கிடையாது. அதே சமயம் குணப்படுத்த முடியாதது என்று இதை ஒதுக்கி விடும் அளவு அபாயமும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.



உணவுக்கட்டுப்பாடும், நல்ல உடற்பயிற்சியும் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். சரியான எடையோடு ஆரோக்கியமாக இருந்தாலே உடலில் அழகு கூடி மெருகேறும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எனவே உடல் எடையை கட்டுப்படுத்த சிறிதளவு செறிவூட்டப்பட்ட உணவை அவ்வப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.



கார்ப்பரேட் வாழ்க்கையில் மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அதேபோல் ஐடி நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடம் கடும் வேலைப்பளுவும் நீரிழிவை ஏற்படுத்துவதோடு பாலியல் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. ஆகவே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பதை விட ஓய்வான நிலையைத் தேடிப் பெற்று வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையை இறுதிவரை அனுபவிக்கமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.



English summary
Erectile dysfunction (ED) is the inability of a man to achieve or maintain an erection sufficient for his sexual needs or the needs of his partner. Erectile dysfunction is sometimes called as “impotence”. The term "erectile dysfunction" can mean the inability to achieve erection, an inconsistent ability to do so, or the ability to achieve only brief erections.

Get Notifications from Tamil Indiansutras