பார்வை ஒன்றே போதுமே
பெண்ணின் கண்கள் அவர்களின் உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும். தாம்பத்ய உறவின் தேவையை கண்களின் மூலமாக வெளிப்படுத்துவதில் பெண்கள் கில்லாடிகளாம். ரொமான்ஸ் லுக் விடும் மனைவியைப் பார்த்தாலே தெரியும். அவர்களின் கண்கள் ஒளிர்வது காதலிற்கான ஒரு அழைப்பு என்பதை கணவர்கள் புரிந்து கொள்ளலாம்.
அதீதமான அன்பு
தாம்பத்ய உறவு முடிந்த உடன் கடமை முடிந்தது என்று ஆண்கள் விட்டு விட்டு உறங்கப் போய்விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியல்ல கணவரின் அரவணைப்பிலேயே இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். தாம்பத்ய உறவுக்குப் பின்னர்தான் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான செல்லமாய் கடித்தும், முத்தமிட்டும் விளையாடுவார்களாம். அவர்கள் முத்தமிட தொடங்கினாலே இன்னமும் என்னுடன் கொஞ்ச நேரம் இரு என்று சொல்லாமல் சொல்கின்றனர் என்று அர்த்தமும்.
சமையலில் தெரியும்
மனைவி அன்றைக்கு மட்டும் விசேசமாய் ஏதாவது சமையல் செய்கிறாரா? தட்டில் வகை வகையாய் உங்களுக்கு ஏதாவது தென்படுகிறதா? அன்றைக்கு படுக்கையறையில் ஏதாவது விசேசம் என்பதை அப்போதே புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் பெரும்பாலான மனைவிகள் தங்களின் மையலை சமையலில் வெளிப்படுத்துவார்களாம். சாப்பிட்டு முடித்த உடன் தெம்பாய் பாதம் பால் குடித்துவிட்டு உங்கள் விளையாட்டை தொடங்குங்களேன்.
அன்பாய் ஒரு அணைப்பு
மனைவியின் அன்பான அரவணைப்பு அதிகமாக எப்போது கிடைக்கும் தெரியுமா? அந்த மூன்று நாட்களில் அவர்களின் காதல் தேவைகள் அதிகமாக இருக்குமாம். அப்பொழுது கழுத்தை கட்டிக்கொண்டும். சின்ன சின்ன முத்தமிட்டும் தங்களின் காதலை வெளிப்படுத்துவார்களாம். அந்த நேரத்தில் அவர்களின் தேவையெல்லாம் கணவரின் அன்பான அரவணைப்பைதான்.