•  

மனைவியை கவர மன்மத மந்திரங்கள்

Sex
 
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் தேவைகளில் அதிக வித்தியாசங்கள் உள்ளன. பெண்ணின் செக்ஸ் தேவைகள் உடலோடு மட்டுமே தொடர்புடையது அல்ல. அது உணர்வு பூர்வமானது. தனக்கு தேவை என்பதோடு தன் மனதை கவர்ந்த ஆணுக்கு மட்டுமே தன்னைத் முழு மனதோடு தர எந்த பெண்ணும் சம்மதிப்பாள் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்டுகள். ஆரோக்கியமான, தன்னம்பிக்கை நிறைந்த, தனக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆண்மகனே சிறந்தவன் என்ற எண்ணம் பெண்ணுக்கு எழும். அதுபோன்ற நம்பிக்கை தரும் கணவன் அமையப்பெற்றால் அவன் சொல்லும் வார்த்தைகளை வேதங்களாக நினைத்து பின்பற்றுவாள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

மனைவியின் மனம் கவர உளவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

என்னதான் கணவன் மனைவி என்றாலும் காதல் என்பது கண்ணியமானதாக இருக்கட்டும். முத்தம் கூட மென்மையானதாக அச்சுறுத்தாதவகையில் இருக்கட்டும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவன் தனக்குரியவனாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதை கவனத்தில் கொண்டு நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டும்.

திருமணம் ஆன புதிதில் உங்கள் காதல் மனைவியோடு அதிக நேரம் செலவழியுங்கள். அலுவலகம் வேலை என்று இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தால் உங்கள் மனைவி தனக்கு ஒரு வேலையை தேடிக்கொண்டு போய்விடுவார். இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க கொஞ்சநாளைக்கு மனைவியில் முந்தானையை பிடித்துக்கொண்டு சுற்றுங்களேன் தப்பேயில்லை அப்புறம் உங்கள் பேச்சுக்கு மனைவியிடம் மறுபேச்சு என்பதே கிடையாது.

படுக்கை அறையில் அதிக நெருக்கத்தை எதிர்பார்க்கும் பெண்கள் எங்காவது பொது இடத்திற்கு செல்லும் போதும் தன்னுடைய கணவன் தன்னுடைய கையை பிடித்துக்கொண்டு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களாம். பார்க், பீச், சினிமா என்று போகும் போது கொஞ்சம் கொஞ்சலும், கொஞ்சம் உரசலும் இருக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

புதிதாக திருமணமான உடன் எக்காரணத்தைக் கொண்டும் கோபத்தை அவளிடம் வெளிப்படுத்தாதீர்கள். அப்படியே கோபப்பட்டாலும், உடனே சமாதான மாகிவிடுங்கள். அப்போது உங்கள் கோபத்தை நியாயப்படுத்திப் பேசாதீர்கள். ஏதோ தவறாக பேசிவிட்டேன். இனி கண்டிப்பாக பேச மாட்டேன் என்று சமாதானமாகவே பேசவேண்டும். இது உங்கள் மனைவியை கண்டிப்பாக சமாதானப்படுத்தும்.

அலுவலகத்தில் டென்ஷனை சந்தித்தாலும் அதை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள். வீட்டில் உங்கள் மனைவி, பிள்ளைகளை மட்டும் நினையுங்கள், அலுவலகத்தில் உள்ள கோபத்தை எக்காரணம் கொண்டும் மனைவியிடம் பிரயோகித்து விடாதீர்கள். அலுவலகம் விட்டு வரும்போது ஏதாவது ஒரு பரிசை வாங்கி வாருங்கள். சின்ன முத்தம், அன்பாய் ஒரு தழுவல் என பாசத்தோடு அந்த பரிசுப் பொருட்களை கொடுத்துப்பாருங்களேன் உங்கள் மனைவி உங்களிடம் டோட்டல் சரண்டராவார்.

சமையலறையில் சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது உதவும் சாக்கில் சின்ன சின்ன சில்மிசங்களை செய்யுங்கள். இதுபோன்ற ரொமான்ஸ் நடவடிக்கைகளை எத்தனை வயதானாலும் பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். இப்படிப்பட்ட செயல்களை பெண்களுக்கு சமையல் அறையில் ஏற்படும் சிரமத்தை குறைக்கிறதாம்.

அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கட்டுப்பாடான சுதந்திரம் கொடுத்தால் பெண்கள் அதிகம் மகிழ்கின்றனராம். படுக்கை அறையில் தன் பேச்சை கேட்கவேண்டும், தான் சொல்வதற்கு கட்டுப்படவேண்டும் என்று கூறுவதை விட அவர்களையும் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட விடுங்களேன். உணர்வுபூர்வமான இந்த சுதந்திரம் உங்களின் மனைவியின் மனதில் உங்களை ஹீரோ அளவிற்கு உயர்த்தி விடும்.



English summary
Women need more. They generally express the need to know that sex means more than just a physical release. Yes, physical release is good for women, but for women orgasm comes more easily and may even feel better if sex has some emotional meaning.
Story first published: Friday, June 1, 2012, 14:35 [IST]

Get Notifications from Tamil Indiansutras