"மனித உடலிலேயே ஈ-கோலை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, உணவு ஜீரணத்துக்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. மலம் கழிக்கும்போது சரியாக சுத்தப்படுத்தாவிட்டால், மலத்தின் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவே நமக்கு தீமை செய்ய க்கூடியதாகவும் மாறிவிடும். இதைத் தவிர சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாகவும்... சுகாதாரமற்ற இடங்களில் மல, ஜலம் கழிக்கும்போது பிறப்புறுப்புகளில் தொற்றுவதன் வாயிலாகவும் உடலில் பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய தொற்று ஈ-கோலையை விரட்டியடிக்க நவீன மருந்து மாத்திரைகள் நிறைய வந்துவிட்டன. அதனால், அச்சம் கொள்ளவேண்டாம்!" என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலை நாடுகளில் வேகவைக்காத காய்கறிகள், மாட்டுக்கறி மூலமாக ஈ- கோலை பாக்டீரியா பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஈ-கோலை பாதிப்பு ஏற்பட்ட உடன் எந்த அறி குறியும் தெரியாது. 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கும். திடீர் வயிற்றுப்போக்கு வந்தால்... உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோ சனை பெறுவது நல்லது!" என்கிறார்கள் மருத்துவர்கள்.
"யூ.டி.ஐ. ((UTI-Urinary Tract Infection)யூ.டி.ஐ. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, தாங்கமுடியாத எரிச்சல், முதுகுவலி, குளிர் காய்ச்சல்... போன்ற தொல்லைகளால் அவதிப்படுவார்கள். இதற்குச் சரியான மருத்துவ சிகிச்சை அளிக்காத போது... நாளடைவில், சிறுநீரகத்தைப் பாதித்து உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உண்டு. இதில் இருந்து தப்பி க்க சாத்தியமான எளிய வழி இருக்கிறது. சுத்தமான தண்ணீரை அதிகம் குடித்தாலே... பாதிப்பை ஓரளவுக்குக் குறைத்துவிடலாம்!
‘யூ.டி.ஐ.' என்பது தொற்று நோய் வகையைச் சேர்ந்தது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் முற்றிலும் தீரும்வரை உடலுறவைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது ஆணுறையைப் பயன் படுத்தலாம். மனைவிக்கு யூ.டி.ஐ. பாதிப்பு அடிக்கடி இருந்தால், முதலில் கணவருக்குதான் விந்து பரிசோதனை செய்ய வேண்டும். பாதிப்பு இருக்கும் பட்சத்தில், உடலுறவின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே விந்து வெளியாகிவிடும்.
ஏனெனில், ஆண்களின் சிறுநீரகத்திலிருக்கும் ‘புராஸ்டேட்' எனும் சுரப்பி, சிலசமயம் வயதின் காரணமாக அளவில் பெருத்துவிடும். அப்போது புராஸ்டேட்டில் ஈ-கோலை தாக்குதலும் அதிகமாக இருக்கும். இதனால், விந்து முந்துதல், மலட்டுத் தன்மை, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அணிவகுக்கும்.
ஈ-கோலை பாதித்த தன்மை யைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் ஊசி மற்றும் மாத்தி ரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் பாதிப்புகளைக் குறைக்கவும், அறவே அதன் பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் ஒரே வழி" என்கின்றனர் மருத்துவர்கள். ஆண், பெண் இருவரில் ஒருவர் மலம் கழித்துவிட்டு, தங்கள் உறுப்பை சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமலிருந்து, அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக் கொண்டாலும்... இந்த பாக்டீரியா பரவக் கூடுமாம்.
அதேபோல... உடலுறவுக்குப்பிறகு, பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அசதியாலோ அக்கறையற்ற போக்காலோ பலரும் அப்படியே உறங்கிவிடுகிறார்கள். அது தவறு. தாம்பத்தியத்தில் தொற்றுக்கு வாய்ப்பு ஏற்படாதபடி இயற்கையாகவே சில ஏற்பாடுகள் இருந்தாலும், இத்தகைய பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து தப்பிக்க... உறவுக்குப் பின்னர் சுத்தம் அவசியமாகிறது. வாழ்கைத்துணை தவிர, மற்றவர்களுடன் உடலுறவு கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.