•  

கண் இமைகளில் முத்தமிட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

Kiss
 
காதலின் முதல் மொழி முத்தம். நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்தோடு இருந்தால் கூட ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தை மாற்றிவிடலாம். முத்தமிடும் இடம் எங்கு என்பதைப் பொருத்து அதன் அர்த்தங்களும் மாறுகின்றன. உங்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் சங்கேத பாஷையாகக் கூட முத்தத்தை பயன்படுத்தலாமாம். எங்கு முத்தமிட்டால் என்ன அர்த்தம் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.காதலர்கள் அதிக அளவில் முத்தமிட நினைக்கும் இடம் உதடுகள் உதட்டில் முத்தமிட்டால் நான் உன்னை நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.கைகளில் முத்தமிட்டால் நான் உன்னை பக்தியுடன் வணங்குகிறேன் என்று அர்த்தமாம்.கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி என்று பாரதியாரே பாடியிருப்பார். ஆனால் கண்ணத்தில் முத்தமிட்டால் நான் உன்னுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.நாசியின் மீது முத்தமிட்டால் நீ ரொம்ப அழகா இருக்கே என்று அர்த்தமாம். கழுத்தில் முத்தமிட்டால் நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம். அதே சமயம் காதின் மீது முத்தமிட்டால் சும்மா வேடிக்கைக்காக முத்தமிட்டேன் என்று அர்த்தமாம்.கண் இமைகளின் மீது முத்தமிட்டால் உன்னுடன் நான் எப்பொழுதும் இருக்க விரும்புகிறேன். நெற்றியின் மீது முத்தமிட்டால் நான் உன்னை மதிக்கிறேன் என்றும் நீ எனக்கு வேண்டும் என்றும் அர்த்தம் கொள்ளலாமாம்.அப்புறம் நம் நேசத்தைப் பொருத்து நாம் நேசிப்பவர்களைப் பொருத்து எங்குவேண்டும் என்றாலும் முத்தமிட்டுக் கொள்ளலாமாம்.
English summary
A kiss is the beginning of a love story. A kiss by the person you love takes awayall your hurt, pain and anger. A kiss makes you forget all your worries. A kiss makes an otherwise bad day into a good one. There are different kinds of kisses and different styles of kisses but did you know that every kiss that you give your loved one either on the cheek or lips or neck etc,
Story first published: Friday, June 29, 2012, 17:22 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more