கூச்சம் என்பது ஆண், பெண் எல்லோர்க்கும் பொதுவான ஒன்று தான். இதில் வயது வித்தியாசமும் கிடையாது. திருமணமான தம்பதியரிடையே இந்த கூச்சம் இருக்கக் கூடாது. கணவனோ, மனைவியோ கூச்சமின்றிப் பேசினால் தான் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மனதில் உள்ள அந்தரங்க ஆசைகளைப் பரிமாறி உறவில் முழு இன்பத்தையும் அனுபவிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். இன்றைக்கு மருத்துவர்களை நாடும் நோயாளிகளில் பலரும் 50 வயதைக் கடந்த பின்னரும் கூட இன்னும் செக்ஸ் பற்றிய சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வேதனையான விசயம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பெண்களுக்கு அச்சம்
செக்ஸ் உணர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது. இன்றைக்கும் ஆண் மட்டுமே தனது ஆசைகளை வெளிப்படுத்தும் சூழல் நிலவுகிறது.
தனது ஆசைகளைச் சொன்னால் கணவர் நம்மைக் காமவெறி பிடித்தவள் என்று நினைத்து விடுவாரோ என்று பெண்கள் அஞ்சுகின்றனர். அதேபோல ஆண்களும் தனது தேவையை வெளிப்படுத்த கூச்சத்துடனும், தயக்கத்துடனும் இருக்கின்றனர்.
ஒரு சிலருக்கு செக்சில் அல்லது ஒரு செயலில் மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஆனால் இதை எப்படி நமது துணையிடம் கேட்பது என்ற தயக்கம் இருக்கும். தங்களுடைய கூச்சத்தையும், சந்தேகங்களையும் செக்ஸ் மருத்துவ நிபுணர்களிடமாவது கேட்டு தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
நடுத்தர வயதைத் தாண்டிய பலரிடம் செக்சில் ஆர்வம் குறைந்து வருவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் வீட்டில் வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கின்றனர் என்ற எண்ணத்தில் பலர் தாம்பத்ய உறவை விடுகிறார்கள். இன்னும் சிலர் முற்றிலுமாக செக்ஸையே முற்றிலுமாக விலக்கிவிடுகின்றனர்.
அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்க, செக்ஸ் துணை புரியும் என்பதை பலர் உணராததால் இவ்வாறு உள்ளனர்.எனவே கூச்சத்தைப் போக்க சில கிளர்ச்சியூட்டும் விளையாட்டுக்களை விளையாடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
திருமணமான தம்பதியரிடையே கூச்சமும், தயக்கமும் விலகவேண்டும் என்பதற்காகத்தான் கைகளைப் பிடித்து சுற்றிவரச் செய்கின்றனர். குடத்தில் உள்ள தண்ணீருக்குள் மோதிரத்தைப் போட்டு எடுக்கச் சொல்கின்றனர். எனவே திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்ய
வாழ்க்கையில் கூச்சமோ, தயக்கமோ தேவையில்லை என்பது நிபுணர்களின் கருத்து. எனவே கூச்சத்தையும், தயக்கத்தையும் விட்டு வெளியே வாருங்கள். உங்களுக்கு என சந்தோசமான உலகத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.