•  

'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...!

Post Sex Intimacy
 
தாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக நடந்து கொள்வதாக பெண்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.

தாம்பத்ய உறவு என்பது இருவழிப்பாதையாக இருக்கவேண்டும். தம்பதியர் இருவரும் மனம் ஒன்றி ஈடுபட்டால் மட்டுமே அதில் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.

தாம்பத்திய உறவிற்கு முந்தைய விளையாட்டுக்களைத்தான் அனைவரும் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உறவிற்கு பிந்தைய விளையாட்டுக்கள் இருந்தால்தான் அன்றைய உறவு முழுமையடையவதாகவும், முழு திருப்தியுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

உறவு முடிந்த உடன் சில ஆண்கள் உறங்கிப்போய்விடுவார்கள். சிலர் தம் அடிக்கவோ, வெளியே காற்றுவாங்கவோ போய் நின்றுவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லையாம். உறவிற்கு பிந்தைய சில ரொமான்ஸ் டச் வேண்டும் என்றும் பெண்கள் நினைக்கின்றனர்.

அன்பாய் ஒரு தழுவல், சின்னதாய் ஒரு முத்தம். கைவிரலால் தலை கோதுவது என உறவிற்கு பிந்தைய அரவணைப்பு தரும் விளையாட்டுகளை விரும்புகின்றனராம். மேலும் உறவிற்கு பின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது கூட பெண்களின் விருப்பமாய் இருக்கிறது.

உறவிற்கு பின்னர் உடனே உறங்கிப்போகும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். உறவிற்குப் பின்னர் கரம் கோர்த்து நெற்றிப் பொட்டில் சின்னதாய் ஒரு முத்தமிடுவது அவர்களின் உள்ளக் கிளர்ச்சியை அதிகரிக்கிறதாம். இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உணர்வு அதிகரிப்பதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பாலுறவு கொண்ட பின் அதிக நேரம் துணையுடன் விளையாடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

50 சதவிகிதப் பெண்கள், உறவு கொண்ட பின் நீண்ட நேரம் தங்கள் துணையுடன் செயல்பாட்டில் இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 30 சதவிகிதப் பெண்கள் தாம்பத்ய உறவின் போது தங்கள் துணை சுயநலத்துடனேயே நடந்து கொள்வதாகக் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் துணையுடன் வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவு பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று 38.8 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

பெண்களைப் பொருத்தவரை பாலுறவுக்கு முந்தைய விளையாட்டுக்களையும், உறவு கொண்ட பின்னர் செய்கைகளையும் விரும்புவதே முக்கியமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.English summary
Everybody knows how important foreplay is to a good sexual experience. Rushing through sex just isn't something that is done. Being patient and gradually allowing yourself to become aroused is what differentiates good sex from lousy sex.
Story first published: Monday, May 14, 2012, 16:49 [IST]

Get Notifications from Tamil Indiansutras