ஆக்ஸிடோசின் ஹார்மோன் பொதுவாக சுகப்பிரசவ காலங்களிலும், தாம்பத்ய உறவின் போதும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “தாம்பத்ய உறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!
மனிதர்களின் பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் என்கின்றனர் நிபுணர்கள். இந்த உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின் எனவேதான் இதனை காதல் ஹார்மோன் என்றும் அழைக்கின்றனர்.
மனிதர்களின் உடலில் எண்ணற்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அதில் ஆக்ஸிடோசின் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மோனாக கருதப்படுகிறது. மூளையின் பின்புறத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பிதான் இந்த ஹார்மோனை சுரக்கிறது. இதனால்தான் செக்ஸ் உணர்விற்கும் மூளைக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதனால்தான் தம்பதியர் ஒருவருக்கொருவர் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடிகிறது. ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான் உச்சக்கட்டத்தின் போது அதிகமாக சுரக்கிறதாம். எனவேதான் தாம்பத்ய உறவு முடிந்த உடன் தங்கள் துணையின் மீது அதீத காதலும், அதிக பாசமும் ஏற்படுகிறது என்கின்றனர் உளவியலாளர்கள்.
தாம்பத்ய உறவுக்கு மட்டுமல்லாது கர்ப்பிணிகளின் சுகப்பிரசவத்திற்கும், ஆக்ஸிடோசின்தான் காரணமாகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பை அதிகரிப்பதும் இந்த ஹார்மோன்தான் என்கின்றனர் பிரபல மருத்துவர்கள்.