மனைவியரின் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு பிறகு தங்களுக்கு உச்சநிலை எட்டியதுடன் உறங்கிப்போகும் கணவர்களே அதிகம். இருவரும் ஏக காலத்தில் உச்சத்தை எட்டும் நிலையே முழுஇன்பம் என்பதை பல ஆண்கள் அறியாமலிருக்கிறார்கள். இதனால் உணர்ச்சிகளால் கிளறப்பட்டு உச்சநிலை அடையாத பெண்கள் பாலியல் வேட்கையை தணிக்க முடியாமல் ஏமாற்றத்திற்கும், தவிப்பிற்கும் ஆளாகிறார்கள். அதை வெளிப்படையாகக் காட்டமுடியாமல் வெறுப்புக்கு ஆளாவதால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், மணமுறிவுகள், பிரிவுகள், முறை தவறிய உறவுகள் என்று பல வழிகளில் இது வெளிப்பட ஆரம்பிக்கிறது. எனவே உச்சநிலை அடைவதற்கான வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளனர் பிரபல செக்ஸாலஜிஸ்ட்கள்.
அவசரம் தேவையில்லை
உலகளவில் பாலுறவு தொடர்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் பெரும்பான்மையினர் செக்சில் முழு திருப்தியடையவில்லை என கூறியிருந்தனர். திருமணமாகி பத்து ஆண்டுகளான பெண்களும் இதில் அடக்கம்.
இருவரும் ஒருசேர தொடங்கும் உறவில் ஆணுக்கு எளிதில் திருப்தி ஏற்பட்டு விடும். பெண்ணிற்கு தேவையான இன்பத்தை ஆண் முழுமையாக தரவேண்டுமெனில் மென்மையாக மெதுவாக தொடங்கவேண்டும். அவசரப்படாமல் உறவைத் தொடங்கினால் பெண்கள் உச்சபட்ச இன்பத்தை அடைவார்கள்.
நோ டென்சன் ரிலாக்ஸ்
படுக்கையறையில் டென்சன் ஆகாது. கோட்டையை பிடிக்கப்போவது போல் அவசரப்படாமல் இசைக்கு ஸ்வரம் சேர்க்கும் கலைஞன் போல உறவை ரிலாக்ஸ்சாக தொடங்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் ஒவ்வொரு நரம்பும் அந்த உன்னத தருணத்தை அடையும் என்பது அவர்களின் கருத்து.
தம்பதியரின் உடற்கூறு அமைப்பை பற்றி நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எங்கு தொட்டால் உணர்ச்சி மேலிடுகிறது என்பதை ஒவ்வொரும் தமது துணைக்கு புரிய வைத்து உறவு கொண்டால் உச்சநிலை அடையமுடியும் என்கின்றனர்.
ஈகோ தேவையில்லை
மனதும், உடலும் அமைதியான நிலையிலேயே உறவை தொடங்கவேண்டும். ஏதோ அவசரத்திற்கு உடல் தேவைக்கு என உறவு வைத்துக்கொண்டால் ஆர்கசம் அடைய முடியாது. சக்தி முழுவதையும் தயார்படுத்தி மனதளவிலும் உடலளவிலும் உறவுக்கு தயாரானால் மட்டுமே உச்சகட்ட இன்பத்தை அடையமுடியும்.
உறவில் ஈடுபடும் தம்பதியருக்கிடையே ஈகோ கூடாது. யாருக்கு என்ன தேவையோ அதை கேட்டுபெறுவதும். அதேபோல் துணைக்கு அதுபோல இன்பத்தை அளிப்பதும் அவசியம்.
உறவில் மெருகேற்றுங்கள்
ஒவ்வொருநாளும் புதுமையான முறையில் தொடங்கினால் ரெஸ்பான்ஸ் அதிகம் இருக்கும். இடத்தையும், செயல்பாட்டையும் மாற்றி மாற்றி வைத்துக்கொள்வது ஆர்கசத்தை அடையும் எளிய வழியாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உறவில் உச்சநிலை என்பது துரித உணவு போல உடனடியாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உறவில் அது ஒரு முக்கிய கட்டம். சிற்பியின் கையால் செதுக்க செதுக்க கிடைக்கும் சிற்பம் போல உறவில் மெருகேறினால்தான் உச்சத்தை அடையமுடியும்.
பாலுறவில் பெண்ணுறுப்பின் மேற்புறத்திலுள்ள கிளிட்டோரிஸ் தூண்டல் என்பது முக்கியப் பங்காற்றுகிறது. பெண்ணை முழுஇன்பப் பாதைக்கு கொண்டு செல்லும் முக்கிய நடவடிக்கை இது. கிளிட்டோரிஸ் என்பது உணர்ச்சி நரம்புகளின் முடிச்சு மையம். இதை சரியானபடித் தூண்டினால் காமனை வெல்லலாம்.