•  

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!

Orgasam
 
செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம் எனப்படும் உச்ச நிலையை அடைவதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்கசம் எனப்படும் உச்சநிலையை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம்தான். இது மன நிலை சம்பந்தப்பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரமமான காரியம் இல்லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.

தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சிதறல்தான் ஆர்கசத்தை அடைவதில் சிக்கல் ஏற்பட முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு.

மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிருக்கும்போதும் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.

'என்னத்த' என்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல்லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செக்ஸ் உணர்வை அனுபவித்து, லயித்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்கசம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.

நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத்தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிறதாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சினைக்கு அடுத்து பெண்கள் அதிகம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கசத்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என்கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.

இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர்கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்தும், அப்போது எந்த சிந்தனையில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

English summary
Women who are distracted during sex have trouble reaching orgasm, according to new research. Women who reported more trouble reaching orgasm during sex also had more automatic negative thoughts during the act, the report said. These negative thoughts included everything from those lacking erotic imagery to thoughts of sexual failure and sexual abuse.
Story first published: Wednesday, November 30, 2011, 14:56 [IST]

Get Notifications from Tamil Indiansutras