•  

உலகளவில் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு அதிகரித்து வருகிறது: உலக கருத்தடை ஆய்வு அறிக்கை

Unsafe Sex
 
லண்டன்: உலகளவில் அதிகளவிலான இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுக் கொள்வதாக, உலக நாடுகள் பலவற்றில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு மூலம் தெரிகிறது.

நேற்று உலக கருத்தடை நாள் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உலகளவில் பாலியல் உறவு மற்றும் கருத்தடை முறைகள் குறித்த கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் உலகளவில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உலகில் பாதுகாப்பற்ற முறையில் பலரிடம் செக்ஸ் உறவு கொள்ளும் முறை அதிகரித்து வருவது தெரிந்துள்ளது.

புதிய நபருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளும் இளவயதினரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 20 சதவீதமும், பிரன்சில் 2 மடங்கும், அமெரிக்காவில் 40 சதவீதமும் அதிகரித்துள்ளது. வளர்ந்த நாடுகளில் உள்ள இளம்வயதினருக்கு கூட தகுந்த கருத்தடை மற்று பாதுகாப்பான உடலுறவு குறித்த தகுந்த அறிவு இல்லை என தெரிகிறது.

ஐரோப்பிய நாடுகளில் 50 சதவீதம் இளம் வயதினர் பள்ளிகளின் மூலம் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். தென் அமெரிக்கா, அமெரிக்கா, மற்றும் ஆசியா பசிவிக் பகுதிகளில் 30 சதவீதம் மக்கள் செக்ஸ் கல்வியை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல நபர்களுடன் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவு கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் சிலி, போலாந்து, சீனா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த 6,000க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆய்வில் உலகிலேயே தாய்லாந்தில் 62 சதவீதம் மக்களும், அதற்கு அடுத்தப்படியாக சீனாவில் 58 சதவீதமும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 32 சதவீதம் இளம் வயதினர் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, உலகளவில் பாதுகாப்பற்ற உறவுகளால் இளம் வயதினர் இடையே தேவையற்ற கர்ப்பமடைவது அதிகரித்து வருகிறது. கருத்தடை முறைகளை குறித்து கேட்பதற்கு சில நாடுகளில் மக்கள் வெட்கப்படுவதால், அது குறித்த சரியான அறிவு இல்லை.

எகிப்தில் உள்ள 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளம் வயதினர் உறவு கொண்ட பின்பு, குளித்தால் கருத்தரிக்க மாட்டார்கள் என எண்ணுகின்றனர். இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள 35 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் மாதவிடாய் காலத்தில் உறவு கொள்வது மிகவும் பாதுகாப்பானது என கருதுகின்றனர். இதில் உலகளவில் பொதுவாக 15 சதவீதம் பேருக்கு கருத்தடுப்பு முறைகளில் விருப்பமே இல்லை என தெரிவித்துள்ளனர்.English summary
More teenagers are having unprotected sex and they know less about contraception, an international study claims. The number of young people having unsafe sex with a new partner increased by nearly a fifth in Britain and more than doubled in France, the research for World Contraception Day revealed.
Story first published: Wednesday, September 28, 2011, 10:25 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more