அதேசமயம், செக்ஸ் உறவை ஆரம்பித்த பின்னர் பெண்களுக்கு மார்புகள், இடுப்புகள் பெருப்பது உண்மைதான். ஆனால் இதற்கும், உறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை. பாலுணர்வை தூண்டும் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதனால்தான் உடல் பெருக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
பூரிப்பும் திருப்தியும்
அதேபோல திருமணத்திற்கு பின்னர் ஆண்களும், பெண்களும் குண்டாகி விடுகிறார்கள். இப்படிக் குண்டாவதற்கும், செக்ஸ் உறவுக்கும் கூட சம்பந்தம் இல்லை. சிங்கிளாக இருப்பவர்களை விட திருமணம் செய்து கொண்டவர்கள் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபடுபவர்கள் கூடுதலாக சாப்பிடுவார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உடல் பெருக்கத்திற்கு இதுவும் கூட ஒரு காரணமாக அமைகிறது
கட்டுப்பாடும் பயிற்சியும்
தாம்பத்ய உறவு காரணமாக உடல் பெருக்கம் ஏற்படுவதில்லை. உறவின்போது ஏற்படும் திருப்தி, அதனால் ஏற்படும் உடல் பூரிப்பு, மன ரீதியான நிம்மதி, திருமணம்தான் ஆகி விட்டதே என்ற ரிலாக்ஸ் மனப்பான்மை, அதுவரை கடைப்பிடித்து வந்த உணவு, உடற்பயிற்சிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தளரும்போது இப்படி உடல் பெருக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
திருமணத்திற்குப் பிறகும், தாம்பத்ய உறவைத் தொடங்கிய பிறகும் உடல் பருமன் அதிகரிக்கக் கூடாது என யாராவது விரும்பினால், நிச்சயம் அவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தாக வேண்டும். அப்போதுதான் பருமனாவதைக் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.