•  

பெண் குழந்தை வேண்டுமா? சைவத்திற்கு மாறுங்கள்

Baby Girl
 
டென்மார்க்: பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டென்மார்க் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பெண்கள் கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை உண்டால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக அவர்கள் சில பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் பச்சைக் காய்கறி உண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அதே சமயம் பொட்டாஷியம், சோடியம் அதிகமுள்ள வாழைப்பழம், உருளை அதிக அளவில் உண்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

சரியான உணவு உட்கொண்டால் விரும்பும் குழந்தையை பெறலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் கருத்தரிக்கும் நேரத்தில் நடக்கும் பிற விஷயங்களைப் பற்றி அவர்களால் நிச்சயமாக கூறமுடியவில்லை.

ஆராய்ச்சியாளர்கள் 172 தம்பதிகளை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு கருத்தரிக்கும் முன் 9 வாரத்திற்கு கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பழம், காய்கறிகள், மாத்திரை கொடுத்தனர். அவர்கள் கருவுற்ற பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்த ஆய்வில் இறுதி வரை கலந்து கொண்ட 32 தம்பதிகளில் 26 பெண்களுக்கு பெண்ணும், 6 பேருக்கு ஆண் குழந்தைகளும் பிறந்தன.

ஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பத்து மாசம்தான், பெத்தா எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாசம்தான். இதைப் புரிந்து கொண்டாலே போதும். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

English summary
Dutch Scientists have found that women who take calcium and magnesium rich fruit and vegetable diet give birth to baby girl. They have proved this by experimenting 172 couples. 32 couples have finally completed the trial and 26 mothers have given birth to girls while only six have boys.
Story first published: Saturday, April 16, 2011, 10:13 [IST]

Get Notifications from Tamil Indiansutras