செக்ஸ் உறவை விரும்பாத பெண்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிலிருந்து தப்பிக்கப் பார்ப்பார்கள். இது இன்று அதிகரித்தும் வருகிறது.
தலையை வலிக்கிறது, இன்று வேண்டாம் ப்ளீஸ் என்பார்கள். சிலரோ, எனக்கு ரொம்ப டயர்டாக இருக்கிறது, நாளைக்குப் பார்க்கலாம் என்று ஒதுங்கி ஓடுவார்கள். இப்படி பல்வேறு காரணங்களைக் காட்டி செக்ஸ் உறவை தவிர்க்கும் பெண்களால் அவர்களது கணவர்களுக்கு சிரமம்தான்.
ஆனால் செக்ஸ் உறவை பெண்கள் வெறுக்க என்ன காரணம் என்பதை ஆய்வாளர்கள் விளக்குகின்றனர்.
பெண்களின் மூளையில் செக்ஸ் ஆர்வம் மிகவும் குறைவாக தூண்டப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாம். செக்ஸ் உறவை வெறுக்கும் பெண்களின் மூளையில் செக்ஸ் உணர்வுகள் மிக மிக குறைவாக தூண்டப்படுகிறதாம்.
பெண்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ் வேட்கையை அளிக்கும் அளவுக்கு அவர்களது மூளையின் செக்ஸ் உணவுர்வுகளைத் தூண்டும் பகுதி இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் செக்ஸை கண்டு விலகி ஓடுகிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளை செயற்கையாகத் தூண்டுவித்து அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதும் சிரமமாம். உதாரணமாக,செக்ஸ் உணர்வு மூளையில் குறைவாக உள்ள பெண்களை என்னதான் ஆபாசமான படங்களைப் பார்க்க வைத்தாலும், செக்ஸியான காட்சிகளைப் பார்க்க வைத்தாலும் அவர்களுக்கு அந்த உணர்வு தூண்டப்படாதாம்.
அதேசமயம், இது மனரீதியான பிரச்சினையாகவும் இருக்கலாம். அதை மறுப்பதற்கில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன ரீதியான பிரச்சினையாக மட்டும் இருந்தால் செக்ஸ் ஆர்வத்தைத் தூண்டும் செயற்கையான முறைகளை தொடர்ச்சியாக கையாண்டு அவர்களுக்கும் செக்ஸ் வேட்கையை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
உங்களது பார்ட்னர் இன்று வேண்டாம், நாளை பார்க்கலாம் என்று தொடர்ந்து கூறி வந்தால் உடனே பரிசோதனைகளை செய்து சரி செய்யப் பாருங்கள்.