•  

இங்கிலாந்தில் தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வோர் 3 சதவீதம் பேரே!

Sex
 
இங்கிலாந்தில் ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். உங்களவருடன் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை செக்ஸ் உறவு வைத்துக் கொள்வீர்கள் என்பதுதான் அந்த ஆய்வில் கேட்கப்பட்ட கேள்வி. இதில் சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்தது.

'ஆடாம் அன்ட் ஈவ்' என்ற ஆண், பெண்களுக்கான செக்ஸ் தொடர்பான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.

அந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் தாங்கள் செக்ஸ் உறவில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு அவர்கள் பல காரணங்களைக் கூறியுள்ளனர். அலுப்பு தட்டியது, சோர்வு உள்ளிட்டவை அதில் சில காரணங்கள்.

26 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை உறவு கொள்வதாக கூறியுள்ளனர்.

16 சதவீதம் பேர் வாரத்திற்கு 3 அல்லது நான்கு முறை வைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

அதேசமயம், 15 சதவீதம் பேர் மாதத்திற்கு ஒன்று அல்லது 2 முறை வைத்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை உறவு கொள்வோரும் உள்ளனர். அவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதமாகும்.

7 சதவீதம் பேர் சில மாதங்களுக்கு ஒருமுறைதான் தாங்கள் உறவு கொள்வதாகக் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் 1000 ஆண், பெண்கள் கலந்து கொண்டனர். இவர்களில் திருமணமாகாதவர்களிடம் நடத்திய ஒரு தனிக் கருத்துக் கணிப்பில், 5 சதவீதம் பேர் மட்டுமே தாங்கள் இதுவரை செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதில்லை என்று கூறியுள்ளனர்.

English summary
According to a recent poll , only three per cent of the respondents said they had sex daily. Nearly 20 per cent admitted that they weren't sexually active. Out of the 1,000 men and women surveyed, the majority of respondents (26 per cent) said they have sex once or twice a week. A mere 1 per cent enjoyed sex more than once a day, reveals the poll. Seven per cent said they had sex every few months.
Story first published: Monday, May 23, 2011, 16:54 [IST]

Get Notifications from Tamil Indiansutras