க்யூட் 'கிளீவேஜ்' வேண்டுமா?

Cleavage
 
கிளீவேஜை விரும்பாத பெண்கள் இருக்க மாட்டார்கள். தங்களது முன்னழகை எடுப்பாக காட்ட விரும்பாத அழகுப் பெண்கள் குறைச்சல்தான். அதேசமயம், கிளீவேஜை அழகாக காட்டினால்தான் அது அழகாக இருக்கும். இல்லாவிட்டால் அபத்தமாகவும், கேலிக்குரியதாகவும் மாறி விடும்.

உங்களது அழகை சரியான முறையில் வெளிக்காட்ட வேண்டும். சுருங்கச் சொன்னால், அளவான பிளவுதான் அழகோ அழகு எனலாம். முன்னழகை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் காட்ட சில டிப்ஸ்கள்.

சில சமயங்களில் சரியான, பொருத்தமான நெக்லைன் உடைய உடைகளை அணியா விட்டால் இரு மார்பகங்களும் சம அளவில் இல்லாமல் போய், கிளீவேஜ் சரியாக இருக்காது. இதை சரி செய்ய சரியான முறையிலான பிராவை அணிந்து சரி செய்து அழகை மேலும் எடுப்பாக்கிக் காட்டலாம்.

சிலர் தொளதொளவென உடை அணிந்து, அதையும் தாண்டி கிளீவேஜை காட்ட முயற்சிப்பார்கள். ஆனால் லூசான உடைக்குள் உங்களது அழகு மறைந்து போய் விடும். அப்படிப்பட்டவர்கள், மார்புப் பகுதிகளை எடுப்பாக்கிக் காட்டும் வகையிலான, மார்புகளின் கீழ்ப் பகுதியில் அழுத்தம் கொடுத்து எடுப்பாக்கிக் காட்டும் பிராக்களை அணிந்து சமாளிக்கலாம்.

மேலும், வி நெக்குடன் கூடிய லேசான ஸ்டிராப் உடைய உடைகளை அணிவது எப்போதுமே நல்லது. அது நமது முழு மார்புகளையும் அழகாக எடுத்துக் காட்டி கிளீவேஜை சிறப்பாக்க உதவும்.

அதேபோல, டைட்டான டாப்ஸ் அணியும்போது அது மார்புகளை அழுத்தி முழுமையாக கிளீவேஜ் கிடைக்காமல் செய்து விடுவர். அதையும் தவிர்க்க வேண்டும்.

இதுபோல உங்களது மார்பழகை சரியான முறையில் வெளிக் கொண்டு வந்தால் அழகான, கவர்ச்சிகரமான கிளீவேஜைப் பெற முடியும்.

Story first published: Sunday, September 12, 2010, 15:27 [IST]
Please Wait while comments are loading...