வீட்டை சுத்தமாக, பளிச்சென வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு கர்ப்பமாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளனவாம்.
புதிய சர்வே ஒன்று இப்படிக் கூறுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இதுதொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நமது வீட்டில் உள்ள மின்னணுப் பொருட்கள், கார்பெட்டுகள், ஜன்னல் திரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் சேரும் தூசியால் கர்ப்பமாவது தடங்கல்படும்.
அதில் படியும் தூசியில் உள்ள, பிபிடிஇ (PBDE) வேதிப் பொருட்களை சுவாசிக்கும்போது அவை நமது உடலின் கொழுப்பு செல்களில் போய் தங்கிக் கொள்கின்றன.
ரத்த அளவில் பிபிடிஇ அளவு அதிகம் உள்ள பெண்களுக்கு கர்ப்பமாவது தடங்கல்படுகிறது. அதேசமயம், இந்த அளவு குறைவாக உள்ள பெண்கள் விரைவில் கர்ப்பமடைகிறார்கள்.
பிபிடிஇ அளவு குறித்த ஆய்வுகள் இதுவரை மனிதர்களிடையே பெருமளவில் நடத்தப்படவில்லை. விலங்குகளில்தான் இது அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
எனவே வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டால் பிபிடிஇ அளவு பெண்களின் ரத்தத்தில் சேருவது குறைந்து, அவர்களின் கர்ப்பத் தரிப்பு விரைவாக வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.