ஆனால் இந்த உறவுகள் நீண்ட காலம் நீடிப்பதில்லை என்றும், பாதியிலேயே கசப்பான அனுபவங்களுடன் முடிந்து விடுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்குக் காரணம் இரு தரப்பிலும் உத்தரவாதங்கள் முறையாக, சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதே என்கிறாற்கள் நிபுணர்கள்.
இந்தியாவின் பெருநகரங்களில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் எனப்படும் சேர்ந்து வாழும் போக்கு அதிகரித்துள்ள அதே நேரத்தில், அந்த உறவுகள் வேகமாக பிரிந்து வருவதும் அதிகரித்து வருகிறதாம்.
இது போல சேர்ந்து வாழ்வது சட்டப்படி குற்றம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டும் தீர்ப்பளித்து விட்டதால் இதுபோன்ற உறவுகள் இப்போது அதிகரித்து விட்டன. ஆனால் இவையெல்லாம் நீண்ட கால உறவுகளாக இருப்பதில்லை, நீர்க்குமிழிகள் போலவே காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிரபல மன நல ஆலோசகர் டாக்டர் கீதாஞ்சலி சர்மா கூறுகையில், குடும்ப வாழ்க்கை முறைகள் இந்தியாவில் தற்போது வெகுவாக மாறி வருகின்றன. இந்த விஷயத்தில் நம்மில் பலரும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர்.
ஆனால் இது வெற்றிகரமாக இருப்பதில்லை. இப்போது கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் பலரும் வெறும் இனக் கவர்ச்சி அடிப்படையில்தான் சேர்ந்து வாழுகின்றனர். அந்தக் கவர்ச்சி குறையும்போது சட்டென பிரிந்து போய் விடுகின்றனர். அவர்களுக்குள் தரப்படும் உத்தரவாதங்கள் முழுமையாக, சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றார் சர்மா.