•  

இன்டர்நெட்டில் செக்ஸ் தேடல்- இந்தியர்களுக்கு தடை

இந்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 பல்வேறு இன்டர்நெட் நிறுவனங்களின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை தாராளமாக செக்ஸ் குறித்த தகவல்களைத் தேடி வந்த இந்தியர்களுக்கு இனிமேல் சர்ச் என்ஜின்களில் அது போல சுதந்திரமாக தேட முடியாது.

இந்திய இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் தங்களது சர்ச் என்ஜின்கள் மூலம் அதீத செக்ஸ் தகவல்களைத் தேடுவதை பல்வேறு இன்டர்நெட் நிறுவனங்கள் பில்டர்களைப் போட்டு தடுக்க ஆரம்பித்துள்ளன.

யாஹூ சர்ச் என்ஜின், யாஹூவுக்குச் சொந்தமான பிளிக்கர் புகைப்பட இணையதளம் ஆகியவற்றில் தற்போது safe-search facility வசதி ஆன் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மைக்ரோசாப்ட் நிறுவன சர்ச் என்ஜினும் இந்திய பயன்பாட்டாளர்கள், அதீத செக்ஸ் குறித்த தகவல்களைத் தேட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே இந்தியர்கள்தான் செக்ஸ் என்ற வார்த்தையை அதிக அளவில் இன்டர்நெட்டில் தேடுவதில் முன்னணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 4, 2010, 16:41 [IST]

Get Notifications from Tamil Indiansutras