45 நாளில் 7 ரகசிய திருமணங்கள்-எகிப்து பெண் கைது

கெய்ரோ: 45 நாட்களில் 7 பேரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட எகிப்து பெண்ணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.

எகிப்தில் உள்ள ஹர்காடா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மெகினா என்ற இளம் பெண் சர்வராக வேலை பார்த்து வந்தார்.

ஆண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பைத்தியமாக சுற்றிய அந்த பெண் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். மேலும், எகிப்து நாட்டில் திருமணம் செய்யாமல் செக்ஸ் வைத்து கொள்வது தவறு என்பதால் அவர் தன்னிடம் மாட்டும் ஆண்களுடன் திருமணம் செய்து கொண்டதாக ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் அந்த ஹோட்டலுக்கு வந்த வாலிபரையும் மெகினாவுக்கு பிடித்து விட்டது. அவரையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மெகினாவின் புதிய கணவர் தனது மனைவிக்கு பல கணவர்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்தார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து ஹர்காடா நகர போலீசார் ஏமாற்று மோசடி, பலரை திருமணம் செய்தது போன்ற காரணங்களுக்காக மெகினாவை கைது செய்தனர்.

விசாரணையில் மெகினா, தான் 45 நாட்களில் 7 பேரை திருமணம் செய்து கொண்டதாகவும், அதில் இரண்டு திருமணங்களுக்கு இடையே வெறும் 10 மணி நேரம் தான் இடைவேளை இருந்ததாகவும் தெரிவி்த்து போலீசாரை அதிர்ச்சியடைய செய்தார்.

மேலும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை அனைவரும் மன்னிக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.Story first published: Thursday, August 13, 2009, 14:21 [IST]
Please Wait while comments are loading...