•  

பிரசவத்திற்கு பின் உறவிற்கு அவசரமா? : மருத்துவர்கள் ஆலோசனை

பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ் உறவு வலி நிறைந்த அனுபவமாக உள்ளதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். பிரசவத்தின் தன்மை பொருத்தே பெண்களுடன் உறவை தொடரவேண்டும். என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ் உறவின் மூலம் மூன்றில் ஒரு பெண் வலிகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது. இந்தியாவிலும் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் உள்ளன.

கர்ப்ப காலத்தின் போதும் பிரசவத்திற்கு பின்னும் எப்பொழுது தாம்பத்ய உறவில் ஈடுபடுவது என்பது பெரும்பாலான தம்பதியரியரின் கேள்வியாக உள்ளது. கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி அது பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

உடல் குறித்த உத்தரவாதம்

பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண் ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங் களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண் களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்ப தாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

பிரசவத்தின் தன்மை

பிரசவத்தின் போது ஏதாவது சிக்கல் நேர்ந்ததா? சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும். குழந்தை பிறக்கும் போது பெண்ணின் பிறப்பு உறுப்புகளில் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்பமில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப்படுத்துவது கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்று

உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது. கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும். பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், மீண்டும் கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன் -மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்தினாலேயே அதைத் தவிர்க்கின்றனர். எனவே கணவர் இதை புரிந்து கொள்ளவேண்டும்.

கருச்சிதைவு சிக்கல்

கருச்சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

சில பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு கார ணத்தால் பால் வற்றிவிட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கை தேவை என்கின்றனர் மருத்துவர்கள்.

English summary
After delivery a couple can indulge in sex when the new mother thinks it absolutely fine . If she does not have any problem , regarding health and feels ok , then enjoying sex will help her instead . But if she doesnot feel like having sex ( because sometimes breastfeeding mothers losses the drive for sex) then co-operate with her .

Get Notifications from Tamil Indiansutras