•  

ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்ப்பது என்ன?

Love
 
பெண்கள் இப்படி நடக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல ஒவ்வொரு பெண்ணும், ஆணிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறாள்.

ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்புகள் வித்தியாசப்படும். ஆனால் அனைத்துப் பெண்களும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும், பாசமும், நேசமும்தான்.

மகிழ்ச்சியான தருணத்தில் தலைகோதும் விரலும், சோக தருணத்தில் தலை சாய மடியும் தரும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சி அடைகிறாள்.

எதிர்பார்க்கும் தருணத்தில் ஏங்கச்செய்து, எதிர்பாராமல் முத்தமிடும் துணையிடம் பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் ஆணை விட சில நேரங்களில், வாக்குவாதம் செய்து கோபப்படும் காதலனை கண்டு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

ஊடல் நேர்ந்து பிரிந்த பின் சில நிமிடங்கள் கழித்து காதலன் போன் செய்யும் போது, பெண் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தான் விரும்பும் ஒரு விஷயத்தை செய்து தன்னை சந்தோஷப்படுத்தும் ஆண் கிடைத்தால் ஒரு பெண் மகிழ்ச்சியடைகிறாள்.

தான் விரும்பாத ஒரு காரியத்தை காதலன் செய்துவிட்டு அது சாதாரண விஷயமாகவே இருந்தாலும், பின்பு அதற்காக வந்து ஸாரி கேட்கும் அந்தத் தருணம் பெண்களின் மகிழ்ச்சியில் ஒரு கர்வமும் கூடவே தெரியும்.

மிக முக்கியமாக... காதலனின் நறுமணத்தை நுகரும் பொழுது, அது ஷாம்பூ வாசனையாக இருந்தாலும் சரி.. அதனை நுகரும் போதும் பெண்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

English summary
Girls look for a guy who is intelligent and compassionate. A guy who will compliment her kindly and politely and who will show affection towards her. Girls like guys who are polite and who won't say anything gross or mean. Although, girls do tend to like it when the guy she likes teases her playfully. They want you to give them some more attention than what you give the other girls.
Story first published: Wednesday, April 6, 2011, 10:05 [IST]

Get Notifications from Tamil Indiansutras