பண்பும் பயனும் அது "
என்று இல்லறத்தின் பெருமையைப்பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் தெரிவித்துள்ளது.
அரக்க பறக்க ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் அன்பும், அறனும் சரிவர பேணப்படாத காரணத்தாலே பல குடும்பங்களில் சண்டை, சச்சரவுகளும், குழந்தை வளர்ப்பில் சிக்கல்களும் நிறைந்து நிகழ்கால, எதிர்காலச் சமுதாயங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.
மேலும் அன்பும், அறனும் கிடைக்கப் பெறாத நிலையில் இளைய சமூகத்தினர் மனமுறிவு, உளச்சிக்கல் போன்றவற்றிற்கு ஆளாகின்றனர். இதை உணர்த்தும் வகையிலேயே அன்றைய நாளிலிருந்தே திருமண நிகழ்வின் போது வாழ்த்திற்குரிய பரிசுப்பொருளாக இந்த திருக்குறள் இடம் பெறுகிறது.
இனிய சொற்கள் தேவை
இல்லறத்தில் எப்போதும் இனிமை வலம்வர வேண்டுமானால் காயான சொற்களைப் பயன்படுத்தாது கனிந்த சொற்களையே பயன்படுத்திட வேண்டும் என்று வள்ளுவர் கூறியுள்ளார்.
சில சமயங்களில் பல குடும்பங்களில் அமைதிக்குப் பங்கம் விளைவதே தகவல்களைப் பறிமாறிக் கொள்வதில் எப்படிப் பேசுகிறார்கள் என்பது தான்!. சொல்ல வந்த செய்தியைக் கடுமையாக சொல்லுவதும், தெளிவில்லாமல் சொல்லுவதும் அமைதிகுலையக் காரணமாக அமையும்.
இனிய பயணத்திற்கு துணை
திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் ஆத்மார்த்தமாக இணைந்து, நீண்ட தூரம் செல்லும் இனிய பயணம். இல்லற பயணம் இனிமையாக அமைய வேண்டுமானால் உடன் வருகிற துணையின் ஒத்துழைப்பும், ஆதரவும் மிக அவசியமானது. அந்த துணையை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது.
புரிந்து கொள்ளுங்கள்
காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ முதலில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப் பிந்தைய ஏமாற்றங்களை தவிர்க்க இது உதவும்.
உடல் ரீதியான, மனரீதியான கோளாறுகள் எதுவென்றாலும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து கொண்டால் இல்லறம் நல்லறமாக இனிக்கும்.
கணவனும், மனைவியும்தான் மற்றவர்களை விடவும் மிக நெருங்கிய நபர்கள். ஒருவர் துன்பப்படுவதை இன்னொருவர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இல்வாழ்க்கையில் இணைந்தவர்கள் தோழமை உணர்வு உள்ளவராக இருப்பது அவசியம். இருவரும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பது நல்லது.
அடிக்கடி அன்பையும் காதலையும் வெளிபடுத்தினால் தாம்பத்ய உறவு ஆழமாகும். இதற்கு ஆண்டிற்கு ஒருமுறை எங்காவது வெளியூர் பயணம் செய்வது மிகவும் நல்லது. குழந்தைகள் இருந்தால் தாத்தா, பாட்டியிடம் விட்டுவிட்டு செல்லுங்கள். வாழ்க்கையை திட்ட மிட்டு அனுபவித்தால் இல்லறம் நல்லறமாவது உறுதி.