•  

காபி, கட்டிங், செக்ஸ்-ஹார்ட்டுக்கு ஆபத்து!

Sex
 
அதிகமாக காபி குடிப்பவர்கள், அடிக்கடி மது அருந்துபவர்கள், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு ஒரு கெட்ட செய்தி- உங்களுக்கு மாரடைப்பு வரலாமாம்.

மாரடைப்பு வருவதற்கான காரணிகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கிட்டத்தட்ட38 காரணிகள் குறித்து ஆராய்ந்தனர். இதில் எது, மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைகிறது என்பதே இந்த ஆய்வின் நோக்கம்.

இந்த ஆய்விலிருந்து, காபி, செக்ஸ் மற்றும் மது ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பிற காரணிகளை விட மது, செக்ஸ்,காபி ஆகியவையே மாரடைப்புக்கு அதிக காரணமாக அமைவதாக வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், காற்று மாசும் மாரடைப்பு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளதாம். புகை பிடித்தல் பழக்கமும் கூட மாரடைப்புக்கு வித்திடுமாம். அதேசமயம், செக்ஸ், காபி மற்றும் மது ஆகியவைதான் மிக முக்கிய காரணிகளாக உள்ளன.

அதிக அளவில் காபி சாப்பிடுவோருக்கும், அடிக்கடி மது அருந்துவோருக்கும், நிறைய செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகள் மிக மிக அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மாரடைப்பு ஏற்பட பிற காரணிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுபவை, போக்குவரத்து நெரிசல், போதை மருந்துகள் உள்ளிட்டவை. இதில் போதை மருந்துகளை விட காற்று மாசுதான் மிக அபாயகரமானவை என்றும் வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

English summary
Analysis of data about potential triggers for a heart attack finds that common substances and everyday activities like - coffee, alcohol and sex - can all help spur an attack. Researchers studied 38 studies examining environmental triggers for heart attacks. The researchers looked for common threads that could establish how these factors might rank in risk.
Story first published: Friday, March 18, 2011, 13:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras