ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவருக்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதாம்.
அதிக அளவில் செக்ஸில் ஈடுபடுவோருக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவது வெகுவாக குறைகிறதாம். இதனால் மாரடைப்பு போன்றவை, ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அண்டுவது மிக மிக குறைவாம். இதனால்தான் அவர்களுக்கு நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.
இதுகுறித்து ஆய்வை ஒருங்கிணைத்தவரான இத்தாலியைச் சேர்ந்த இமானுவேல் ஜனினி கூறுகையில், தாங்கள் உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதை ஆய்வில் நிரூபித்துள்ளோம்.
செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.
அதேசமயம், நம்பிக்கையில்லாமல் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுவோர், உடல் தேவைக்காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேருகிறதாம்.
ஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிக அளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.