லாத்வியாவில் நடைபோட்ட 800 அழகுப் பெண்கள்

Blonde March
 
லாத்வியாவின் பிளான்டி பெண்கள் சங்கத்தின் சார்பில் லாத்வியாவின் ரிகா நகரில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. ஆரோக்கியமான வாழ்வை வலியுறுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் 800 அழகுப் பெண்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் பிங்க் நிற உடை அல்லது தலையலங்காரத்துடன் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்கத் தலைவியான மரிகா கெடார்ட் கூறுகையில், பிளான்டி என்றாலே ஒரு விதமான எண்ணம் உள்ளது. அதை மாற்றும் வகையில், எங்களுக்கும் எல்லாவிதமான சமூக அக்கறைகளும் உள்ளன என்பதைக் காட்டும் வகையில் இந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

ரிகா நகரில் நடந்த இந்த ஊர்வலம் அனைவரையும் கவர்ந்தது. அதை விட முக்கியமாக பல அழகிகள் கவர்ச்சி தெறிக்க நடை போட்டு அனைவரையும் குஷிப்படுத்தினர்.

அணிவகுப்பு வீடியோ...

Please Wait while comments are loading...