•  

மெக்சிகோவில் 6 மாதத்தில் 400 ஓரினச் சேர்க்கைத் திருமணங்கள் பதிவு

Gay Marriage
 
மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள கடந்த 6 மாதங்களுக்கு முன் தான் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமுலுக்கு வந்த 6 மாத காலத்தில் சுமார் 400 ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த திருமணங்களில் 398 திருமணங்கள் சட்டப்படி பதியப்பட்டுள்ளன. இவற்றில் 53 சதவிகிதம் ஆண்களுக்கு இடையில் நடந்த திருமணங்களாகும். மீதம் உள்ள 47 சதவிகிதம் பெண்களுக்கு இடையில் நடந்தது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த 6 மாதத்தில் 41 வெளிநாட்டவர்களும் மெக்சிகர்களுடன் சேர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பியர்கள். இவர்கள் தவிர்த்து தென் அமெரிக்கர்களும், வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டனர். ஓரினச் சேர்க்கைத் திருமணங்களை சில நாடுகள் தான் சட்டப்பூர்வமாக்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு திருமணமானவர்களில் பலர் 30 முதல் 40 வயதுடையவர்கள். 71 முதல் 90 வயதானவர்களுக்கெனத் தனியாக 4 திருமணங்கள் நடந்தன.

ஓரினச் சேர்க்கைத் தம்பதிகள் குழந்தைகளைத் தத்தெடுக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஓரினச் சேர்க்கைத் திருமணத்திற்கும், அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் சர்ச் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.Story first published: Thursday, September 9, 2010, 9:48 [IST]

Get Notifications from Tamil Indiansutras