•  

பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கும் மந்திரா பேடி

Mandira Bedi
 
டிவி நடிகை, சினிமா நடிகை, டிவி தொகுப்பாளினி என பல அவதாரம் எடுத்துள்ள மந்திரா பேடி முதல் முறையாக பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கவுள்ளார்.

சாந்தி டிவி தொடர் மூலம் நடிகையானவர் மந்திரா பேடி. அந்தத் தொடர் மந்திராவுக்கு பெரும் பெயரை தேடித் தந்தது. இதையடுத்து டிவி நிகழ்ச்சிகளை நடத்தும் ஹோஸ்ட் ஆக மாறினார். பின்னர் சினிமாவிலும் நடித்தார். தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் அவர் நடித்த சின்ன கேரக்டர் பெரிதாக பேசப்பட்டது.

பி்ன்னர் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து அளிக்கும் பிரசன்டராக அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் தற்போது பான்டீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கிறார் மந்திரா பேடி. பாடிகேர் நிறுவன தயாரிப்பான பான்டீஸுக்காக இந்த நடிப்பு அவதாரம்.

இதுகுறித்து மந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்போதெல்லாம் பெண்கள் மிகவும் விவரமாகவும், தெளிவாகவும் உள்ளனர். நல்ல பிரான்ட் உள்ளாடைகளைத்தான் விரும்புகிறார்கள். தேர்வு செய்வதிலும் கில்லாடியாக உள்ளனர்.

இந்தியாவில் எத்தனையோ பான்டீஸ்கள் இருந்தாலும், பாடிகேர் சிறந்த ஒரு தயாரிப்பாக உள்ளது. பெண்மைத்தனம் நிரம்பிய பான்டீஸ் இது. வேடிக்கையாகவும் உள்ளது.

இதை நானே அனுபவித்துப் பார்த்த பின்னரே நடிக்க ஒப்புக் கொண்டேன். பெண்களுக்கு மிகவும் சவுகரியமாக, வசதியாக இது உள்ளது. நல்ல ஸ்டைலாகவும் உள்ளது என்றார் மந்திரா.

1992ம் ஆண்டு முதல் இந்த பாடிகேர் உள்ளாடைகள் வெளியாகி வருகின்றன. ஐரோப்பிய மாடல் உள்ளாடை இவை. பாடிகேர் பிரான்ட் பான்டீஸ் விளம்பரத்தில் நடிக்கப் போகும் முதல் பிரபலம் மந்திரா பேடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, August 14, 2010, 14:40 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras