நீண்ட காலப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளனர் ஆபாச படத் துறையினர். தங்களுக்கென தனி டொமைன் வேண்டும் என்று கோரி அவர்கள் போராடி வந்தனர். இதை ஏற்றுள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.
2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் பிற்போக்குவாத குழுவினரின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில் xxx டொமைனுக்கான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததைத் தொடர்ந்து தற்போது xxx டொமைனை அனுமதிப்பது என்ற முடிவை ஐசிஏஎன்என் எடுத்துள்ளது.
இதையடுத்து இனிமேல் செக்ஸியான, ஆபாசமான படங்களையும், செய்திகளையும் கொண்ட தளங்கள் xxx என்ற டொமைனில் தனியாகவே இயங்கும்.



Click it and Unblock the Notifications


