•  

இங்கிலாந்து: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்

Bra
 
லண்டன்: இங்கிலாந்தில் பயணிகள் கப்பலில் வந்திறங்கிய ருமேனிய நாட்டுப் பெண்ணின் பிராவில் இருந்து 26,000 பவுண்ட் அளவுக்கு யூரோ கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

டியூப்ளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்த அந்தப் பெண்ணிடம் ஹோலிஹெட் துறைமுகத்தில் இங்கிலாந்து நாட்டு எல்லைப் படையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.

அப்போது அவரது பிராவில் 26,000 பவுண்ட்கள் அளவுக்கு 500 யூரோ கரன்சி நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அயர்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்றதால் கிடைத்த பணம் அது என்று அந்தப் பெண் கூறினார்.

ஆனால், அதை அவரால் நிரூபி்க்க முடியவில்லை. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அவர் நிரூபித்தால் அது திருப்பித் தரப்படும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையி்ன் இயக்குனர் பாப் லைன் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் 500 யூரோ நோட்டுகளுக்கு இங்கிலாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீத சட்டவிரோத கருப்புப் பணம் 500 யூரோக்களாகவே உள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எடுத்தது.

Story first published: Monday, May 31, 2010, 17:02 [IST]

Get Notifications from Tamil Indiansutras