•  

'செக்ஸ் ஹீலர்'-1,500 ஆண்களுடன் உறங்கிய பெண்!

Mare Simone
 
லண்டன்: இங்கிலாந்து பெண் ஒருவர் தான் இதுவரை சுமார் 1500 பேருடன் செக்ஸ் உறவை பகிர்ந்து கொண்டதாகக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் மற்ற பெண்களின் கணவர்கள் அல்லது பாய்பிரண்ட்டுகளாம்.

மேற்கு லண்டனின் செல்சியா பகுதியில் வாழும் அந்த பெண்ணின் பெயல் மேர் சிமோன். அவர் ஆண்கள், பெண்கள் மற்றும் தம்பதியினரின் தாம்பத்திய வாழ்க்கையை மெருக்கேற்ற உதவும் செக்ஸ் மருத்துவராக வேலை பார்த்து வருவதாகக் கூறிக் கொள்கிறார். அதே நேரத்தி்ல் நான் விபச்சாரப் பெண் அல்ல என்கிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இந்த வேலையை மகிழ்ச்சியுடன் செய்து வருவதாக கூறும் அவருக்கு தற்போது வயது 54.

இது குறித்து அவர் கூறுகையில்,

அடுத்த பெண்மணிகள் கணவர் அல்லது பாய்பிரண்டுடன் உறங்கி சம்பாதித்து வருகிறேன். ஆனால், நான் ஒரு விலைமாது அல்ல. ஒருவருடைய செக்ஸ் பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலும், அதற்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்திலும் தான் இந்த சேவையை செய்து வருகிறேன்.

இதற்காக அவர்கள் தரும் பணத்தில் தான் என் வாழ்க்கை நடக்கிறது. சேவைக்காக செக்ஸ் வைத்து கொள்வது சட்டப்படி தவறில்லை.

பிரச்சனைகள் தீர்த்து வைப்பதற்கும், நான் வழங்கும் அறிவுரைகளுக்காகவும் என்னிடம் வரும் 'நோயாளிகள்' காசு கொடுக்கிறார்கள். செக்ஸ் சுகத்துக்காக அல்ல.

நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை முன்னேற்றம் காண, மாறுதல் பெற உழைத்திருக்கிறேன். இதன்மூலம் அவர்களது மனைவிகள் அல்லது கேர்ள்பிரண்டுகளும் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

குழந்தை வேண்டும் சில பெண்களுக்கு வேறு சில பெண்கள் வாடகை தாயாக குழந்தை பெற்று தருகிறார்கள். அதேபோல் தான் செக்ஸ் விஷயத்தில் உதவ ஆளில்லாமல் தவிப்பவர்களுக்கு உதவி வருகிறேன்.

எனது வாடிக்கையாளர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது நம்பிக்கை உண்டாக்கி வருகிறேன். அவர்கள் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்வதை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். அவர்களில் சுமார் 1,500க்கும் மேற்பட்டவர்களுடன் உற்சாகமாக செக்ஸ் உறவு வைத்திருக்கிறேன்.

சில சமயங்களில் மனைவிக்கு முன்னால் அவர்களது கணவருடன் செக்ஸ் கொண்ட அனுபவமும் உள்ளது. அதன்மூலம் அவர்கள் இல்லற வாழ்க்கையை எப்படியிருக்க வேண்டும் என்பதை அந்த தம்பதிகள் புரிந்து கொள்வார்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் எனது வாடிக்கையாளர்களை சந்தித்து வருகிறேன். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆலோசனை வழங்குவேன்.

எனது வேலை முழு திருப்தி அளிக்கிறது. இதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன். எந்தவொரு சமயத்திலும் இந்த வேலைக்கு ஏன் வந்தோம் என எண்ணியது கிடையாது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இந்த சேவையை தொடரவிருக்கிறேன்.

செக்ஸ் பிரச்சனைகளை தீர்ப்பவர் என்ற முறையில் என்னை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.Story first published: Wednesday, September 16, 2009, 11:54 [IST]

Get Notifications from Tamil Indiansutras