•  

விபச்சார விடுதி..சைக்கிளில் வந்தால் 'ரிபேட்'...!

German Brothel
 
பெர்லி்ன்: பொருளாதார நெருக்கடியால், விபச்சார விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் குறைந்து விட்டதால் அவர்களைக் கவிர ஜெர்மனியில் புதிய வகை தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெர்லினைச் சேர்ந்த விபச்சார விடுதி ஒன்று.

இது பொருளாதார சிக்கல் காலம். எதிலும் சிக்கணத்தைப் பார்க்கும் நேரம். விபச்சாரத் தொழிலும் அதற்கு விதி விலக்கல்ல.

ஜெர்மனியில் விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழில். அங்குள்ள விபச்சார விடுதிகளுக்கு இப்போது வாடிக்கையாளர் கூட்டம் குறைந்து விட்டதாம். காரணம், பொருளாதார நெருக்கடி. டப்பு இருந்தால்தானே வருவார்கள் வாடிக்கையாளர்கள்.

இதைப் பார்த்த பெர்லின் விபச்சார விடுதி ஒன்று நவீன திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி தங்களது விடுதிகளுக்கு சைக்கிளில் வரும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி கட்டணத்தை அது அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெய்சான் டி என்வி பிராத்தல் என்ற விபச்சார விடுதியின் உரிமையாளரான தாமஸ் கோயட்ஸ் கூறுகையில், பொருளாதார நெருக்கடி எங்களது தொழிலை கடுமையாக பாதித்துள்ளது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களைக் கவர தள்ளுபடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது அவர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நல்லது - எங்களது பெண்களுக்கும் நல்லது என்கிறார்.

தள்ளுபடித் திட்டத்தின் கீழ், ஒருவர் சைக்கிளில் வந்தால் அவருக்கு, 45 நிமிஷத்திற்கு (அதாவது முக்கால் மணி நேரம் இன்பமாக இருப்பதற்கு) வழக்கமாக வசூலிக்கப்படும் 100 டாலர் கட்டணத்திலிருந்து 7 டாலர் தள்ளுபடி செய்யப்படும்.

இந்தத் திட்டம் அமலுக்கு வந்தது முதல் வாடிக்கையாளர்கள் வரவு சற்று திருப்திகரமாக உள்ளதாம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி குஜாலாக இருக்க தினசரி 3 முதல் 5 வாடிக்கையாளர்கள் வருகிறார்களாம். மேலும், பார்க்கிங் பஞ்சாயத்தும் கிடையாதாம். சைக்கிளை தூக்கி நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டு போய்க் கொண்டே இருக்கிறார்களாம்.

ஜெர்மனியில் 2002ம் ஆண்டு முதல் விபச்சாரம் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 லட்சம் விபச்சாரப் பெண்கள் இத்தொழிலில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தப் பெண்களை முறைப்படி ஒப்பந்தம் செய்து, தொழிலில் ஈடுபடுத்துகிறார்கள். இவர்களுக்கு தொழிலாளர் சட்டப்படி அனைத்து சலுகைகளும் உண்டாம்.

சைக்கிள் ஓ.கே. ஒரு வேளை நடந்து வருபவர்களுக்கு ஏதாவது சிறப்புத் தள்ளுபடி கிடைக்குமா..???

Story first published: Thursday, July 16, 2009, 12:06 [IST]

Get Notifications from Tamil Indiansutras