இப்படியும் 'டுபாக்கூர்' விடலாம்!

David Knight
 
லண்டன்: ஹிப்னாடிசம் மூலம் உங்களது மார்பகங்களைப் பெரிதாக்கலாம். விரும்புவோர் என்னிடம் வாருங்கள் என்று சிடி ரிலீஸ் செய்து அறைகூவல் விட்டுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் நைட் என்கிற ஹிப்னாடிச நிபுணர்.

மார்பகப் பெருக்கல் முயற்சிகளில் இதுவரை 85 சதவீதம் பேருக்கு பெரிதாக்கி வெற்றியும் பெற்றுள்ளாராம் நைட். வழக்கத்தை விட சற்று பெரிதாக அவர்களது மார்பங்கள் மாறியிருக்கிறதாம். பெருமை பொங்கச் சொல்கிறார் நைட்.

இதுதொடர்பாக ஒரு சிடியையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கவனியுங்கள் உங்களது மார்பகங்கள் வளருகின்றன, பெரிதாக வளருவதைப் பாருங்கள் என்று போதனை செய்கிறார் நைட்.

ஒருவேளை திருப்திகரமான முறையில் சைஸ் கூடாவிட்டால், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவாராம் நைட்.

நைட் சார், இது எப்படி சாத்தியம் என்று அவரிடம் கேட்டால், எனது வார்த்தைகளை மனதில் வாங்கிக் கொள்ளும் பெண்களுக்கு நம்பிக்கையும், மார்பக பெருக்கமும் அதிகரிக்கிறது. தொய்வுகள் சரியாகி அவை நேர்த்தியாக மாறுகின்றன, பெரிதாகின்றன.

உண்மையில் பெண்களின் மார்புகளின் வளர்ச்சிக்கு, அவர்களது மனம்தான் காரணம். மனம் சரியானால் மார்புகளும் சரியாகும், மனம் விசாலமடைந்தால் மார்புகளும் விசாலமடையும் என்று பாடம் நடத்துகிறார். நான் செய்வது மனதை விசாலப்படுத்துவதான். அதை செய்யும்போது தானாகவே மார்புகளும் வளர்ந்து விடுகின்றன.

ஆனால் இந்த 'பூப் ஷோ' எல்லாம் 'டூப்' என்று பிபிசியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் உடைத்து விட்டனர்.

அப்படியும் நைட் கீழே விழவில்லை - அவர்கள் செய்த முறைப்படி செய்தால் நிச்சயம் மார்பு பெரிதாகாது. அவர்களது முறை சரியல்ல என்று கூறி சமாளித்து விட்டார்.

மார்பு பெருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் நைட்டின் பர்ஸ் பெரிதாகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

Please Wait while comments are loading...