நொடிகளில் மார்பகத்தை எடுப்பாக்கும் நவீன பிரா

Bra
 
பெண்கள் உள்ளாடைகள் தயாரிப்பில் பிரபலமான அல்டிமோ நிறுவனம், விநாடிகளின் மார்பகங்களைப் பெருக்கிக் காட்டும் நவீன பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிராவுக்கு டே டூ நைட் பிரா என்று வித்தியாசமான பெயர் சூட்டியுள்ளனர். இந்த பிராவை அணிந்தால் சில விநாடிகளிலேயே மார்பகம் பெரிதாக, எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறது அல்டிமோ.

இந்த பிராவின் விலை 24 பவுண்டுகள் ஆகும். இதற்காக எந்தவிதமான பிரத்யேக ஏற்பாடும் தேவையில்லை. ஜஸ்ட் இந்த பிராவை வாங்கி அணிந்து கொண்டால் போதுமாம்.

மார்பக மாற்று அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சிலிக்கான் பெளச்சுகள்தான் இந்த நவீன பிராவிலும் இடம் பெற்றுள்ளது.

சிலிக்கான் பெளச்சுகள் உள்ள இந்த பிராவை அணியும்போது, தொய்வடைந்த நிலையில் உள்ள அல்லது சிறிய மார்பகங்கை, இயற்கையான மார்பகம் போல, பெருக்கி, எடுப்பாக்கிக் காட்டுமாம் இந்த பிரா.

இதுகுறித்து அல்டிமோ நிறுவன தலைவர் மிஷல் மோன் கூறுகையில், மிகவும் இலகுவான முறையில், எந்தவிதமான அறுவைச் சிகிச்சையும் செய்யாமல், மார்பகங்களைப் பெருக்கிக் காட்ட இந்த பிரா உதவும். அணிந்த சில விநாடிகளிலேயே பெண்களின் மார்பகங்கள் எடுப்பாக காட்சி அளிக்கும் என்கிறார்.

இந்த மார்பகத்தை பிரபல மாடல் அழகியான டால் பெர்கோவிச்சிடம் கொடுத்து அணிந்து டிரையல் பார்த்தனர். அதை அணிந்து பார்த்த டால் கூறுகையில், இந்த பிராவில் எனது மார்பகங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அணிவதற்கும் சுலபமாக உள்ளது. நம்பிக்கையும், பெருமையும் கூடுகிறது. இதை நிச்சயம் நான் வெளியில் செல்லும்போது அணிந்து கொள்வேன் என்கிறார் பூரிப்புடன்.

Please Wait while comments are loading...