உலக அளவில் இந்தியர்கள் மிகவும் குறைந்த நேரம் மட்டுமே செக்ஸில் ஈடுபட நேரம் ஒதுக்குகின்றனராம்.
சராசரியாக 15 நிமிடம் செக்ஸ்சிற்காக ஒதுக்குவோம் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் 37 நாடுகளில் 30000 பேரிடம் இது தொடர்பாக கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன மேற்கொண்டு படியுங்களேன்.

இந்தியர்கள்
உலக அளவில் பாதுகாப்பான உறவில் ஈடுபடும் நாடுகளில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. 71 சதவிகித இந்தியர்கள் காண்டம் உபயோகிப்பதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

சீனர்கள்
சீனர்கள் 77 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகின்றனராம். அதேபோல ஹாங்காங் நாட்டினர் 73 சதவிகிதம் பேர் காண்டம் உபயோகிக்கின்றனராம்.

முன்விளையாட்டுக்கள்
சீனர்கள் 19.3 சதவிகிதம் பேர் முன்விளையாட்டுக்கு நேரம் ஒதுக்குகின்றனராம். உறவில் ஈடுபட அதிக ஆர்வமும், நேரமும் செலவிடுகின்றனராம்.

15 நிமிடம்
அதேசமயம் இந்தியர்கள் 15.1 நிமிடம் மட்டுமே செக்ஸ் உறவிற்கு செலவிடுகின்றனராம்.

கொலம்பியர்கள் அதிகம்
உலக அளவில் கொலம்பியர்கள் 89 சதவிகிதம் பேர் வாரத்திற்கு ஒருமுறையாவது செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகின்றனராம். இவர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

ரஷ்யர்கள், இந்தோனேசியர்கள்
செக்ஸ் உறவில் கொலம்பியர்களுக்கு அடுத்தபடியாக ரஷ்யர்களும், இந்தோனேசியர்களும் அதிக ஆர்வத்தோடு உள்ளனர். இதில் 88 சதவிகிதம் பேர் வாரம் ஒருமுறையாவது உறவில் ஈடுபடுகின்றராம்.

ஆர்கஸம்
75 சதவிகித ஹங்கேரியன்கள் உறவின் போது நீடித்த ஆர்கஸம் வேண்டும் என்று விரும்புகின்றனராம். அதேபோல 71 சதவிகித கிரேக்கர்கள் செக்ஸ் பற்றியும், ஆர்கஸம் பற்றியும் கருத்து கூறியுள்ளனர்.