•  

ஆண்களுக்கு ஏன் 'அது' பிடிக்குது தெரியுமா...!

Men's love for breasts lies in hormones
 
ஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள் மீது தனி மோகம் என்று உங்களுக்குத் தெரியுமா... கவர்ச்சிதான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தால் அது தவறு.. காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.



உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச்சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப்பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும்.



இதுகுறித்து "The chemistry between us: love, sex, and the science of attraction" என்ற நூலில் லேரி யங் மற்றும் பிரையன் அலெக்சாண்டர் ஆகியோர் கூறியிருப்பதாவது...



தாய்மை அடைவதற்கு முன்பு பெண்களின் மார்பகங்கள் குறிப்பிட்ட சைஸுக்கு மேல் போகாது. ஆனால்,பெண்கள் தாய்மையடைந்த பின்னர் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கும். அதன் பின்னர்தான் ஆண்களுக்கு மார்பகம் மீது கிளர்ச்சி அதிகரிக்கிறதாம்.



மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கிய பின்னர்தான் ஆண்களுக்கும், பெண்கள் மீதான அன்பும், காதலும் அதிகரிக்கிறதாம். இந்த அன்பும், காதலும் அதிகரிக்க அவர்களின் மார்பகப் பெருக்கமும் கூட ஒரு வகையில் காரணமாக அமைகிறதாம்.



இருப்பினும் ஆண்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் செக்ஸூவல் ரீதியாகத்தான் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்களாம். காமத்தின் அடையாளமாக அதை அவர்கள் பார்க்கிறார்கள் என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.



அதேபோல இன்னொரு சுவாரஸ்யத் தகவலையும் இந்த ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதாவது பாலூட்டிகளிலேயே மனித இனத்தில் மட்டும்தான், செக்ஸ் உறவின்போது பெண்களின் மார்பகங்களை அழுத்துவது, தடவுவது, மசாஜ் செய்வது, முத்தமிடுவது உள்ளிட்ட வேலைகளை ஆண்கள் செய்கிறார்களாம். வேறு எந்த பாலூட்டி இனத்திலும் இப்படிப்பட்ட செயல்கள் நடப்பதில்லையாம்.



இப்படி பெண்களின் மார்பகங்களை செக்ஸ் விளையாட்டின் ஒரு அங்கமாக ஆண்கள் பாவிக்க ஆரம்பித்தது கிட்டத்தட்ட 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது இயற்கையாக வந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.




English summary
Why are men obsessed with breasts? Authors of a book analyze the emotional, biological and cultural reasons behind and conclude that it is due to a hormone released during nursing. Larry Young and Brian Alexander, authors of "The chemistry between us: love, sex, and the science of attraction", believe it is due to a hormone released during nursing.
Story first published: Sunday, December 2, 2012, 13:24 [IST]

Get Notifications from Tamil Indiansutras