வெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்!

தினமும் காலை இட்லி மட்டுமே காலை உணவாக கொடுத்தால், இரண்டாவது நாளே நீங்கள் வெறுத்து விடுவீர்கள். கண்டிப்பாக ஒரே வாரத்தில் இட்லியை கண்டாலே எரிச்சல் அடைந்து போவீர்கள்.

சாப்பிடும் உணவிலேயே இப்படி என்றால். மனிதனுக்கு உடல் ரீதியாக உச்சக்கட்ட இன்பத்தை அளிக்கும் செக்ஸில் ஒரே நிலையில் ஈடுபடுவதால் வெறுப்பு வரத்தானே செய்யும்.

சில பெண்கள் சில நிலைகளில் செக்ஸில் ஈடுபட தடை விதிக்கலாம். ஆனால், எல்லா நிலைகளுக்கும் "நோ" சொல்ல மாட்டார்கள். மேலும், வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் நீங்கள் பல நன்மைகள் காணலாம்....

பல்வேறு கோணங்கள்!

பல்வேறு கோணங்கள்!

துணையின் உடல் பாகங்களை வித்தியாசமான கோணங்களில் காண இயலும். இது துணையின் உடல் மீதான பார்வையை மாற்றும். இதனால் உடலுறவில் ஈடுபடும் போது ஈர்ப்பும், இறுக்கமும் அதிகரிக்கும். இது முக்கியமாக ஆண்கள் உச்ச உணர்ச்சி அடைய உதவும்.

உணர்சிகள்!

உணர்சிகள்!

மேலும், வெவ்வேறு நிலையில் செக்ஸில் ஈடுபடும் நீங்கள் பெறும் இன்பமும், உணர்சிகளும் வேறுபடும்.எல்லா நிலைகளிலும் ஆண்குறி ஒரே மாதிரி செயற்படுவது இல்லை. ஒரு சில நிலைகளில் எளிதாகவும், ஒருசில நிலைகளில் கடுமையாகவும் இருக்கும். இதனால், நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போதும், வெவ்வேறு உணர்சிகள் அடைகிறீர்கள்.

உணர்வுகள்!

உணர்வுகள்!

நீங்கள் வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவதால் உங்கள் உணர்வும் வேறுபாடும். செக்ஸ் மீதான் வேறு கோணம் மற்றும் உங்கள் இருவர் மத்தியிலான இணைப்பு பெருகும். இது செக்ஸில் சலிப்போ, சோர்வோ ஏற்படாமல் இருக்க வெகுவாக உதவும்.

இணக்கின்மை!

இணக்கின்மை!

சிறிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்கள் உச்ச இன்பம் அடைவது கடினம். மேலும், பெரிய ஆண்குறி இருக்கும் ஆண்கள் ஒரே நிலையில் செக்ஸில் ஈடுபட்டால் பெண்களுக்கு அசௌகரியங்கள் கூட ஏற்படலாம்.

இதுவே வெவ்வேறு நிலைகளில் ஈடுபடும் போது இந்த இணக்கின்மை குறைவாக இருக்கும். இதற்கு காரணம் ஒரு சில நிலைகளில் ஈடுபட ஆண்குறி பெரிதாக இறுகக் வேண்டும் என்றில்லை. அதே போல ஒருசில நிலைகளில் ஈடுபடும் போது ஆண்குறி பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.

பாகங்கள்!

பாகங்கள்!

செக்ஸில் ஈடுபடும் போது நிலைக்கு ஏற்ப உணர்சிகள் மாறும் என்பதை நாம் முன்பே கூறி இருந்தோம். வெவ்வேறு நிலைகளில் செக்ஸில் ஈடுபடும் போது பெண்களின் பெண்ணுறுப்பு பகுதிகளில் வெவ்வேறு ரீதியாக தீண்டப்படும். இதனால் பெண்கள் அதிகம் உச்ச உணர்வு அடைவார்கள்.

வேண்டியதை செய்யுங்கள்!

வேண்டியதை செய்யுங்கள்!

பெண்கள் உச்ச உணர்வு அடைவதில் தாமதமாக தான் இருப்பார்கள். எனவே, ஒரே நிலைகளில் செக்ஸில் ஈடுபடுவது அவர்கள் உச்ச உணர்வு அடைவதை மேலும் தாமதம் ஆக்கலாம். எனவே, பெண்கள் விரைவாக உச்ச உணர்வு அடைய வேண்டும் என்றால் ஆண்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபட வேண்டியது அவசியம்.

உச்சக்கட்ட இன்பம்!

உச்சக்கட்ட இன்பம்!

மேலும், உச்சக்கட்ட இன்பம் என்பது உடலின் பல்வேறு பாகங்களை தீண்டும் போது தான் உண்டாகும். நீங்கள் வெவ்வேறு நிலைகளில் உடலுறவில் ஈடுபடும் போது உடலின் அணைத்து பாகங்களும் அடங்கும்படி இருக்குமாயின். உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் உச்சக்கட்ட இன்பத்தை எட்டுவது எளிமையாகிவிடும்.

 

Story first published: Tuesday, April 4, 2017, 18:02 [IST]
English summary
Seven Advantages of Using Different Sex Positions!
Please Wait while comments are loading...