செக்ஸின் வேகமானது 20 வயதில் மேலோங்கி, முப்பதுகளை கடந்து நாற்பதை தொடும் போது மெல்ல, மெல்ல குறையும். இந்த இடைப்பட்ட 10 - 15 வருடங்களில் தான் செக்ஸ் மீதான ஈர்ப்பும், ஆசையும் அவரவர் மனநிலையை பொருத்து அதிகமாக காணப்படும்.
செக்ஸில் ஈடுபடுவதில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிக ஆசை இருக்கும். ஆனால், அதை வெளியே கூற மாட்டார்கள். அவர்களுக்கு ஆசை குறைவாக இருக்கிறது என எண்ணி நீங்கள் தப்புக் கணக்கு போட்டுவிட்டால், வாழ்க்கை தப்புத்தாளம் ஆகிவிடும்.
பெண்கள் உங்கள் பர்பாமான்ஸ் குறித்து நிறையவே எடைப் போடுவர்கள். நீங்கள் சரியாக பெட்ரூமில் செயற்படுவதில்லை என்பதை இந்த அறிகுறிகளின் மூலமாக பெண்கள் உங்களுக்கு அறியப்படுத்துவார்கள்...

#1
நீங்கள் அதற்கு தான் அழைக்கிறீர்கள் என தெரிந்தும், தெரியாமல் இருப்பது போல நடிப்பது.

#2
கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, ஆரத்தழுவி கொஞ்சுவது போன்ற நடவடிக்கைகள் குறைய துவங்கும்.

#3
உங்களுக்கு எப்படி எல்லாம் அவரது உடல் இருந்தால் பிடிக்குமோ, அந்த விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்வார்கள். குறிப்பாக அந்தரங்க இடங்களை அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டாமல் தவிர்ப்பது போன்றவை.

#4
மற்ற ஆண்கள் பற்றி உங்களிடமே நேரடியாக புகழ்ந்து பேசுவது. அவர்களிடம் இருக்கும் அட்வான்டேஜ்களை ஒப்பிட்டு கூறுவது.

#5
உங்கள் முன்னிலையிலேயே வேறு ஆண்கள் மீது ஈர்ப்பு கொள்ளும் படி நடந்துக் கொள்வது.

#6
உங்களுடன் இருக்கும் போது அவர்களுடைய பாடி லேங்குவேஜ் கூட மாறுபடும். நீங்கள் முன்னர் கண்டதற்கும், இப்போது காண்பதற்கும் நிறைய மாற்றங்கள் காணப்படும்.

#7
அநாவசியமாக உங்கள் மீது கோபப்படுவார்கள். சின்ன, சின்ன விஷயங்களுக்கு எல்லாம் வார்த்தைகளை விடுவார்கள்.

#8
நீங்கள் இருவரும் தனிமையில் ரொமான்ஸ் காட்சிகள் காணும் போது, அலுத்துக் கொண்டு, இப்படி ஏதேனும் நடந்தால் நல்லா இருக்கும் என பெருமூச்சு விடுவார்கள்.