'முன் கூட்டியே' பிரச்சினையா?

Premature Ejaculation
 
உடலுறவின்போது ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் தலையாயது இந்த முன்கூட்டியே விந்து வெளியாகும் பிரச்சினை. பெரும்பாலான ஆண்களுக்கு இந்தப் பிரச்சினை இருப்பது சகஜமாகி வருகிறது.

விந்தனுவின் இந்த முந்திரிக்கொட்டைத்தனத்தால் செக்ஸ் உறவில் திருப்தியின்மை, மனைவியரிடையே எழும் அதிருப்தி, சோர்வு, சோகம் என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது.

இருப்பினும் இது சரி செய்யப்படக் கூடியதே என்பது டாக்டர்களின் கருத்தாகு்ம். இளைஞர்கள் மத்தியில்தான் இந்தப் பிரச்சினை அதிகம் இருக்கிறது. அதீத ஆர்வமும், அதீத செக்ஸ் உணர்வுமே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள்.

அதேபோல நெடு நாட்களாக உறவு கொள்ளாமல் இருந்து, உறவு கொள்ள முயல்வோருக்கும் இந்த முன்கூட்டியே விந்தனு வெளியாகும் பிரச்சினை ஏற்படுகிறது.

முன்கூட்டியே விந்தனு வெளிப்படுவதற்கு என்ன காரணம்?

பெர்பார்மன்ஸ் ஆன்ஸிட்டி இதற்கு ஒரு முக்கியக் காரணம். அதாவது உறவு கொள்ளும் சமயத்தில் ஏற்படும் பதட்டம். இதைத் தீர்க்க, உறவு கொள்ளும் சமயத்திற்கு முன்பாக, உங்களது பார்ட்னருடன் இயல்பாக பேசி சகஜமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வது நலம். இதனால் கடைசி நேரத்துப் பதட்டத்தைத் தவிர்க்கலாம். அவசரப்படாமல் நிதானமாக இருப்பதும் முக்கியம்.

முன்கூட்டியே விந்தனு வெளிப்படுவதை தவிர்க்க சில உபாயங்களைக் கையாளலாம். அவை இதோ...

சுய கட்டுப்பாடு. உங்களுக்குள் உணர்வுகள் அதீதமாக அதிகரித்து, உச்சத்தை எட்டப் போகிறோம் என்ற நிலை வரும்போது சற்றே நிதானித்து, சிந்தனையை திசை திருப்புங்கள். இதனால் ஆணுறுப்பில் ஏற்படும் உச்ச நிலை சற்று தணிந்து நிதானப்படும். முடிந்தால் செக்ஸ் தொடர்பான நினைப்பையே கூட மாற்றி வேறு எதையாவது உப்புச் சப்பில்லாத ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது உணர்வுகள் வேகமாக குறையும். இதன் மூலம் உங்களது ஆணுறுப்பின் வேகம், உச்சநிலை மடமடவென குறையும். பின்னர் மீண்டும் தொடங்குங்கள்.

கிளைமேக்ஸை நெருங்கி விட்டோம் என்று நினைத்தால் உடனே உங்களது ஆணுறுப்பை, பார்ட்னரிடமிருந்து விலக்குங்கள். இதன் மூலம் விந்தனு வெளிப்பாட்டை நிறுத்தி வைக்கலாம். சற்று உணர்ச்சி குறைந்தவுடன் மீண்டும் தொடங்குங்கள். இதன் மூலம் உங்களது விந்தனு வெளிப்பாட்டை நிறுத்துவதோடு, நீண்டநேர உறவுக்கும் வழி வகுக்க முடியும்.

வி்ந்தனு வருவதை தடுத்து நிறுத்துவதற்கு சில க்ரீம்களும் இப்போது வந்து விட்டது. அவற்றை உங்களது ஆணுறுப்பின் முடிவுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம். இது கிட்டத்தட்ட அனஸ்தீஸியா மாதிரிதான். அதேபோல நன்கு தடிமனான ஆணுறைகளையும் பயன்படுத்தலாம். இதன் மூலம் உணர்வுகள் குறைந்து, செக்ஸ் உறவை நீட்டிக்க முடியும், வேகமாக கிளைமேக்ஸை நெருங்குவதையும் தள்ளிப் போட முடியும்.

இவற்றை விட உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிடுவது மிகவும் நல்லது. இருவரது உறுப்புகளும் ஒன்று சேருவதற்கு முன்பு அவற்றைத் தவிர பிற உறுப்புகளின் உராய்வு விளையாட்டு செக்ஸ் உணர்வை அதிகம் தூண்டும். அதேசமயம், ஆணுறுப்பு வேகமாக நீட்சி அடைவதைத் தடுத்து விந்தனு வெளிப்பாட்டை நிதானப்படுத்தவும் முடியும்.

நீண்ட நாட்கள் கழித்து உறவுக்குப் போகும் நிலை ஏற்பட்டால், முதலில் சுய இன்பத்தின் மூலம் வி்ந்தனுவை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் போதிய இடைவெளி விட்டு பார்ட்னருடன் உறவுக்கு தயாராகலாம். அப்படிச் செய்வதன் மூலம் வேகமாக விந்தனு வெளியேறுவதை தடுக்க முடியும்.

பதறாத காரியம் சிதறாது என்பது பெரியவர்கள் வாக்கு. அது இதற்கும் பயன்படும்.

Please Wait while comments are loading...