செக்ஸ் வேணுமா... 'மாஸ்க்'கோடதான் வரணும்!

Lips
 
இந்தியாவை ஸ்வைன் ப்ளூ படுத்தும் பாடு சொல்லி மாளாது... முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இதில் செக்ஸ் தொழிலாளிகளின் பாடுதான் படு திண்டாட்டமாகிப் போயுள்ளதாம். இது சிரிக்கிற சமாச்சாரமில்லை... ரொம்ப சீரியஸான சமாச்சாரம்!

தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் இரண்டு விஷயத்தோடு வரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார்களாம் மும்பை, புனே போன்ற பகுதிகளில் உள்ள செக்ஸ் தொழிலாளர்கள். ஒன்று காண்டம்... அடுத்தது நல்ல மாஸ்க்!

குறிப்பாக எக்காரணம் கொண்டும் தங்களுக்கு லிப் டு லிப் முத்தமிடக்கூடாது என வாடிக்கையாளர்களுக்கு முதலிலேயே சொல்லி விடுகிறார்களாம். ஆனால் குடிபோதையில் அல்லது முரட்டுத்தனமாக எல்லை மீறுவபவர்களைத் தடுக்க தங்கள் துப்பட்டாக்களால் முகத்தை முழுமையாக மூடிக் கொள்கிறார்களாம் இந்தப் பெண்கள்.

பூனாவில் 5000 செக்ஸ் தொழிலாளர்கள் 'முத்தம் தரமாட்டோம்' என்ற கோஷத்துடன் தங்கள் தொழிலைத் தொடர்கிறார்கள். செக்ஸ் வைத்துக் கொள்ள வரும் அனைத்து ஆண்களும் தாங்கள் பூரண நலத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தினால்தான் அனுமதிப்போம் என்று இவர்கள் தங்கள் சங்கத்தின் மூலம் அறிவித்துள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து, சஹேலி எச்ஐவி எய்ட்ஸ் கார்யகர்த்தா சங்கத்தின் செயலாளர் தேஜஸ்வி, அனைத்து செக்ஸ் தொழிலாளர்களுக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

அதேபோல வஞ்சித் விஹார் என்ற அமைப்பின் மருத்துவர் டாக்டர் லட்சுமியும், மாஸ்க் அணிவதன் அவசியத்தை செக்ஸ் தொழிலாளர்களுக்கு எடுத்துச் சொல்லி இலவச மாஸ்க் வழங்கி வருகிறார்!.

Please Wait while comments are loading...