•  

செக்ஸ்: இந்தியர்கள் செம திருப்தி!

lives
 
செக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு.

இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது).

மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையாம்.

திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை வாழ்வோரின் பட்டியலில் மலேசியர்களுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவரான டாக்டர் ரோசி கிங் கூறுகையில், திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த ஆசியா- பசிபிக் முடிவுகளின் சதவீதத்தை விட மலேசியாவின் சதவீதம் அதிகமாக உள்ளது.

மலேசியர்களில், ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் முக்கியமானது 'எரக்ஷன்' குறித்த கேள்வி. அதை பல்வேறு அளவீடுகள் மூலம் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆண் குறிகளின் அளவுகளை வைத்து அவற்றை நான்கு மட்டங்களாகப் (Level) பிரித்து அவற்றின் அடிப்படையில், செக்ஸ் திருப்தி குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இந்த அளவீடுகள் குறித்து ஆண்களிடம் விளக்கி அவர்களாகவே அதை பரிசோதித்து எங்களிடம் முடிவைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்களுக்கே தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்தி அதிகம் உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.

மேலும் செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமான மன நிலையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் எதையும் பாசிட்டிவாக சிந்திக்கும் மனோ பக்குவத்தையும் பெற்றுள்ளனர் என்றார் ரோசி கிங்.

Story first published: Thursday, February 26, 2009, 17:01 [IST]

Get Notifications from Tamil Indiansutras