கூகுள் சர்ச்சில் இந்தியர்கள் அதிகம் தேடியது- 'முத்தமிடுவது எப்படி?'

Kiss
 
பெங்களூர்: கூகுள் சர்ச் என்ஜினில் இந்தியர்கள் அதிகம் தேடியது- முத்தமிடுவது எப்படி என்பது குறித்துத்தான் என்று கூகுள் நிறுவன அறிக்கை கூறியுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆண்டின் இறுதியில் அந்த ஆண்டில் அதிகம் எந்தப் பொருளை மக்கள் தேடினார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிடும். ஸைட்கைஸ்ட் 2009 என்ற பெயரில் இந்த ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது கூகுள்.

அரசியல்வாதிகள், பிரபலங்கள், நிகழ்வுகள், சினிமா என பல தலைப்பில் இந்த தேடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது கூகுள்.

நிகழ்வுகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களாக பட்ஜெட் 2009, லோக்சபா தேர்தல் முடிவுகள், சத்யம் பங்கு விலைகள் ஆகியவை உள்ளன.

அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியை அதிகம் பேர் தேடியுள்ளனர். சினிமாவில் காத்ரீனா கைப் முன்னணியில் இருக்கிறார்.

உலகின் பிற பகுதிகளைப் போலவே மைக்கேல் ஜாக்சனை இந்தியர்களும் அதிக அளவில் தேடியுள்ளனர்.

உலகின் ஹாட்டஸ்ட் இன்டர்நெட் தளமாக ஜிமெயில் விளங்குகிறது. இந்திய ரயில்வே இணையத் தளத்தையும் நிறையப் பேர் தேடியுள்ளனர்.

எப்படி ('how to') என்ற தலைப்பில் தேடப்பட்ட பொருட்களில் இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளது எப்படி முத்தமிடுவது என்பது குறித்துத்தானாம்.

இதற்கடுத்து எப்படி இணையத் தளங்களை ஹேக் செய்வது, எப்படி தியானம் செய்வது என்பது குறித்தும் நிறைய தேடியுள்ளனர்.

முத்தமிடுவதைக் கூட தேடிப் பார்த்துதானா தெரிந்து கொள்ள வேண்டும்..?.

Please Wait while comments are loading...