'ரேப்'பை குறைக்கும் 'நெட்'?

Internet
 
கற்பழிப்பைக் குறைக்க உதவுகிறது இன்டர்நெட் என்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா?. ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிறது கிளம்சன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று.

இன்டர்நெட் வந்ததற்குப் பிறகு கற்பழிப்பு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளதாம். காரணம், மனதுக்குள் கிளர்ந்தெழும் ஆசாபாசங்களை இன்டர்நெட்டில் படம் பார்த்தும், வீடியோ கிளிப்புகளைக் கண்டு களித்தும் பலர் தணித்துக் கொள்கிறார்களாம். இதனால் ஒரு பெண் வேண்டும் என்ற உணர்வே அவர்களிடமிருந்து விலகிப் போய் விடுகிறதாம்.

கிளம்சன் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரவியல் பேராசிரியர் டாட் கென்டல் தலைமையிலான ஆய்வு இதைத் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கென்டல் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளில் கற்பழிப்பு சதவீதம் 30 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இன்டர்நெட்தான்.

மனதுக்குள் எழும் பெண் ஆசைகளை இன்டர்நெட்டில் இறைந்து கிடக்கும் புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் பார்த்து பலர் அடக்கிக் கொள்கின்றனர். இதனால் கற்பழிப்பு போன்றவை குறைந்துள்ளது.

அதேசமயம், இதை மறுக்கிறார் அக்ரான் குடும்ப கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணரான கரன் சிமினி.

அவர் கூறுகையில், ஆன்லைனில் இறைந்து கிடக்கும் போர்னோகிராபி படங்களால் கற்பழிப்பு குறைந்து விட்டதாக கூறுவதை முழுமையாக ஏற்க முடியாது.

உண்மையில், ஆன்லைன் போர்னோகிராபியால் பாலியல் வன்முறைகள் அதிகரித்துதான் வந்துள்ளன என்கிறார் கரன்.

Please Wait while comments are loading...