சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம்.. அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.
இப்போது இதற்கு முக்தி தர ஒரு மெஷின் வந்து விட்டது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்களுக்கான மெஷின் இது.
ஏடிஎம் மெஷின்ம போல எனி டைம் ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த மெ்ஷினில் உள்ள ஒரு பட்டனைத் தட்டினால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய அது உதவுகிறதாம்.
இந்த ஆர்கஸம் மெஷினுக்கு அமெரிக்காவில் காப்புரிமை வேறு பெற்றுள்ளனர்.

செயற்கை மார்பகம் போல
இந்த மெஷினும் கூட ஒரு வகையான இம்பிளான்ட்தான்.. அதாவது செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல.

சிகரெட் பாக்கெட்டை விட சிறியது
இந்த ஆர்கஸம் மெஷினானது சிகரெட் பாக்கெட்டை விட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.

பட்டனைத் தட்டினால் டிரிக்கர்...
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி விடும். இந்த வேலையை அந்த மெஷினில் உள்ள எலக்ட்ரோடுகள் செய்கின்றன.

பட்டனைத் தட்ட ரிமோட்
இந்த மெஷின் இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் வேறு இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக்னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.

நரம்புகளைத் தூண்டி
அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டி விட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.

முதுகெலும்புக்குப் பக்கத்தில்
இந்த இம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்களாம்.

பின்னழகில் சிக்னல் ஜெனரேட்டர்
மேலும் சிக்னல் ஜெனரேட்டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத்துகிறார்கள்.

எத்தனை முறை வேண்டுமானாலும்
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலையை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.

15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை
தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக ஒரு சர்வே கூறுகிறது.

இன்னும் விற்பனைக்கு வரவில்லை
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் மெஷின் இன்னும் பரிசோதனை அளவிலேயே உள்ளதாம். விற்பனைக்கு இனிமேல்தான் கொண்டு வரவுள்ளனராம். அதற்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாம்.