காதலில் ரெண்டு வகை.. சைவம் ஒன்று, அசைவம் ஒன்று என்று பாடி வைத்தார் ஒரு கவிஞர்.
அதேபோல பெண்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் எனப்படும் உச்சநிலையிலும் கூட இரண்டே இரண்டு வகைகள்தான் இருக்கிறதாம்.

ஆர்கஸம்.. அது எக்கச்சக்கம்
ஆர்கஸம் என்ற உச்சநிலையை பெண்கள் செக்ஸ் உணர்வின்போது சந்திக்கிறார்கள். இந்த உணர்வானது சிலருக்கு குறைவாகஇருக்கும். சிலருக்கு அதிக அளவில் ஏற்படும்.

விதம் விதமாக ஏற்படாதாம்
ஆர்கஸம் என்பது இரண்டே இரண்டு வகைகள்தான் என்று இப்போது ஒரு விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. சிலர் நினைப்பது போல விதம் விதமான முறையில் ஆர்கஸம் ஏற்படாது என்றும் இவர்கள் சொல்கிறார்கள்.

இருக்கா இல்லையான்னே உறுதியா தெரியலை
சிலர், இந்த ஆர்கஸம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா இல்லையா என்பதே இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று வாத்தை நீண்ட காலமாகவே வைத்து வரும் நிலையில் இரண்டு வகையான ஆர்கஸம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அனுபவத்திலிருந்து
இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்து கொண்ட பெண்களிடம் அவர்கள் உணர்ந்த ஆர்கஸம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டனவாம். அதை வைத்துத்தான் இரண்டு வகையான ஆர்கஸத்தையே பெண்கள் சந்திப்பதாக கூறியுள்ளனர்.

எப்போது.. எப்படி
ஆனால் எப்போது ஆர்கஸத்தை தாங்கள் உணர்கிறோம் என்பதையும், அது எப்படி இருக்கிறது என்பதையும் பெண்களால் துல்லியமாக கூற முடியவில்லையாம்.
விவாதங்கள் தொடரட்டும்.... !