அன்பிற்குரியவர்களை அதிக நேரம் கட்டி அணைப்பதன் மூலம் அன்பு அதிகரிப்பதோடு உடலில் வியக்கத்தக்க மாற்றங்களும், நன்மைகளும் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
குறைந்த பட்சம் 20 செகண்டுகளாவது உடலும் மனமும் ஒன்றி கட்டி அணைக்க வேண்டுமாம். அப்போதுதான் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் சுரக்கும் என்கின்றனர்.
கட்டி அணைப்பதன் மூலம் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆகும், ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படும். இதனை உணரச் செய்வது இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான் என்கின்றனர்.

படபடப்பு குறையும்
மனஅழுத்தமான சூழ்நிலையிலோ, படபடப்பான சூழ்நிலையிலோ இருந்தால் அன்பிற்குரியவர்களை கட்டி அணைப்பதன் மூலம், படபடப்பினை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ரத்தக்கொதிப்பு குறையும்
அதுமட்டுமல்லாது அன்பானவர்களை அடிக்கடி கட்டி அணைப்பதன் மூலம், ரத்தக் கொதிப்புகுறைவதோடு, நினைவாற்றல்அதிகரிக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் நிரூபணம்
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் உள்ள, வியன்னா பல்கலைகழக விஞ்ஞானிகள் நமது உடலில், பிட்யூட்டரி சுரப்பியால் உருவாக்கப்படும் ஹார்மோனான, ஆக்ஸிடோசினை பரிசோதித்து வந்தனர்.

அன்பான உறவுகள்
அதில், நண்பர்கள், சகோதரர்கள், உறவினர்கள், காதலன் அல்லது காதலி, என நம்மை நேசிக்கும்அன்பானவர்களை நாம் கட்டிப்பிடித்தால், ஆக்ஸிடோசின் வெளிப்பட்டு, ரத்தக் கொதிப்பு குறைகிறதுஎன்பதை கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் மூலம், நினைவாற்றல் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.

தம்பதியினர் அணைப்பு
இது குறித்து, வியன்னா பல்கலைகழக நரம்பியல் விஞ்ஞானி சாண்ட் குக்லர் கூறியதாவது: பெற்றோர், குழந்தைகளைகட்டிப்பிடிக்கும்போதும், தம்பதியினர் கட்டிப்பிடிக்கும்போதும், ஆக்ஸிடோசின் அதிகளவு சுரப்பது தெரியவந்துள்ளது.

ரத்தக்கொதிப்பு குறையும்
பரஸ்பரம் நம்பிக்கையுடன் உள்ளவர்களை கட்டிப்பிடிக்கும்போது மட்டும் தான், ரத்தக்கொதிப்பு குறைவதும், நினைவாற்றல் அதிகரிப்பதும் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்விளைவுகள்
ஆனால், நமக்கு முன்பின்அறிமுகம் இல்லாதவர்கள், நம்மை நேசிக்காதவர்கள் ஆகியோரை,கட்டிப்பிடிக்கும்போது, இந்த ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்காமல், எதிர் விளைவுகள் ஏற்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

காதல் ஹார்மோன்
மூளையின் உட்பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆக்ஸிடோசின் ஹார்மோன்தான் மனிதர்களின் காதல், காம உணர்வுகளை தூண்டுகிறதாம் எனவே இதனை காதல் ஹார்மோன் என்றும் செல்லப்பெயரிட்டு அழைக்கின்றனர்.

மன அழுத்தம் போக்கும்
இந்த ஹார்மோன் தம்பதியரிடையேயான பிணைப்பை அதிகரிக்கிறது. குழந்தை பிறப்பு, மனஅழுத்தம் போக்குவது, உள்ளிட்ட 11 வகையான நன்மைகளை செய்கிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.