செக்ஸ் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டாலோ, அல்லது கிளர்ச்சியான உணர்வுகள் ஏற்படவில்லை என்றாலோ சிலருக்கு கவலை ஏற்பட்டுவிடும். உடனே நாட்டு வைத்தியரிடம் செல்வது தொடங்கி ஸ்கேன் டெஸ்ட் வரை பல ஆயிரம் ரூபாயை செலவழித்துவிடுவார்கள்.
சில உணவுகள் உணர்வுகளை கட்டுப்படுத்தும்... சில உணவுகள் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்யும். சமையலறையிலேயே மையலை ஏற்படுத்தும் உணவுகள் இருக்கையில் பணத்தை செலவு செய்து ஏன் தீர்வு கிடைக்காமல் தவிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் ஏலக்காய், முந்திரி, பாதம் மட்டுமல்லாது சிவப்பு மிளகாய் கூட உணர்வுகளை கிளரச் செய்கிறதாம். என்னென்ன உணவுகள் உணர்வுகள் தூண்டும் என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.

சிவப்பு மிளகாய்
காரமான மிளகாய் சூடானது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

டார்க் சாக்லேட்
உணர்வுகளை உற்சாகப்படுத்த டார்க் சாக்லேட் சிறந்த உணவு. உங்கள் துணைக்கு ஃபேவரைட் டார்க் சாக்லேட் வாங்கி பரிசளியுங்களேன். சரியான கிளைமேக்ஸ் கிடைக்கும்.

ஏலக்காய்
கேசரி, பாயசம் என ஏலக்காய் உபயோகிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இந்த ஏலக்காயில் உள்ள உயர்தர சத்து நரம்புகளை புத்துணர்ச்சியாக்குகிறதாம்.

பூசணி விதைகள்
பூசணிக்காய் சாப்பிடுவது சத்தானது நம்மவர்களை விதையை நீக்கிவிட்டுதான் சாப்பிடுகின்றனர். பூசணி விதையில் உள்ள உயர்தர துத்தநாகம் செக்ஸ் வாழ்க்கையை உற்சாகப்படுத்துகிறதாம். உயர்தர கொழுப்பு அமிலங்கள் உற்சாகத்தை தூண்டக்கூடியதாக உள்ளனவாம்.

பாதாம், முந்திரி
இப்போதெல்லாம் சமையலறையிம், பாதம், முந்திரி போன்ற கொட்டை வகை உணவுகளை அதிகம் சேர்க்க ஆரம்பித்துள்ளனர். இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் செக்ஸ் ஹார்மோன்களை ஊக்குவிக்கின்றனவாம்.

வாழைப்பழம்
எளிமையான விலை மலிவான பழம் வாழைப்பழம். இதில் உள்ள வைட்டமின் பி 6 உணர்ச்சிகளை உற்சாகப்படுத்துகிறதாம். தினசரி உணவில் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்பவர்களுக்கு செரடோனின் ஹார்மோன் அதிகம் சுரக்கும் என்கின்றனர்.

செலரி
செலரி தண்டுகள் சத்தானது... உற்சாகமான உறவுக்கு செலரியை சாலட்களாக செய்த செய்து சாப்பிடலாம். பச்சை நிற இலை காய்கறிகள் உணர்வுகளை தூண்டும்.

கொய்யா, ஆவகேடா பழங்கள்
கொய்யாவில் உள்ள உயர்தர சத்துக்கள் இதில் உள்ள வைட்டமின் சி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். கோடை காலத்திற்கேற்ற சத்தான சாலட் இது. அதேபோல் அவகேடா பழங்கள் டெஸ்டோட்டிரன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும்.

அத்திப்பழம்
குட்டிக் குட்டி விதையாக இருக்கும் அத்திப்பழங்கள் உயர்தர சத்துக்களைக் கொண்டவை.இது ஆண்மையை அதிகரிக்கும். உற்சாகமான கிளைமேக்ஸ்சிற்கு ஏதுவாகும். ரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.