உறவின் போது பெண்கள் எழுப்பும் முனகல் ஓசையை கேட்கும் ஆண்களுக்கு கிக் ஏற்படுவதாகவும், அவர்கள் உச்சத்தை எட்ட உதவுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேகமான செயல்பாடு
படுக்கை அறையில் பெண்கள் சிலர் சன்னமாய் முனங்குவார்கள். சிலர் சந்தோசத்தில் கூச்சலிடுவார்கள். பெண்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஆண்களுக்கு உற்சாகத்தை தருமாம். இதனால் ஆண்கள் வேகமாக செயல்படவும் செய்கின்றனராம்.
உற்சாக கூச்சல்
பெண்களின் சந்தோஷ சப்தம் ஆண்களுக்குள் பூஸ்ட் போல செயல்பட்டு அவர்களும் உச்சத்தை எட்ட உதவியாக இருக்கிறதாம். இது தொடர்பாக 22 வயதுடைய 71 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் தாம்பத்ய உறவின் பொழுது கூச்சல் எழுப்புவதாக கூறியுள்ளனர்.
ஆணுக்கு மகிழ்ச்சி
முன்விளையாட்டுக்களின் போது தொடங்கி உறவின் உச்சம் வரை மெதுவாகவும், உச்சபட்சமாகவும் எழுப்பும் ஒலி தங்களின் துணைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். முன் விளையாட்டுக்களின் போதே உச்சநிலையை எட்டினாலும் கணவரை உற்சாகப்படுத்தவே உறவின் போது சப்தம் எழுப்புவதாக சில பெண்கள் கூறியுள்ளனர்.
அதிகமான சத்தம்
பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் போடும் வாய்ப்பு இருக்கிறது. 70 சதவீத ஆண்கள் தங்களுடைய மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
தூண்டப்படும் உணர்வுகள்
அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்று இந்த கணக்கெடுப்பினை மேற்கொண்ட நிபுணர் டிரேசி காக்ஸ் கூறியுள்ளார்.
காரணம் தெரியலையே...
பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.